மிரட்டும் ஒமிக்ரான்… மாவட்ட மாவட்டமாக வரும் மினி லாக்டவுன் : மதுரையைத் தொடர்ந்து திண்டுக்கல்லிலும்….!!!

Author: Babu Lakshmanan
3 December 2021, 8:12 pm
Lockdown_UpdateNews360
Quick Share

மதுரை : ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தி வரும் நிலையில், மதுரை, திண்டுக்கல்லில் அடுத்தடுத்து புதிய கட்டுப்பாடுகளை விதித்து பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் உருமாறிய வடிவமான ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், தமிழகத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அதி தீவிரமாக பரவும் இந்த வகை கொரோனா, தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களை எளிதில் தாக்கும் அபாயம் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே, தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தும் பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்ல மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். நியாய விலை கடை, சூப்பர் மார்கெட், திரையரங்கு, வங்கி, துணிக்கடை உள்ளிட்ட 18 இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் நடமாட தடை விதிக்கப்படுவதாக அம்மாநகராட்சி ஆணையரும் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். ஒமிக்ரான் அச்சுறுத்தலால் தமிழக அரசு இன்னும் கட்டுப்பாடுகள் விதிக்காத நிலையில், மாவட்டம் மற்றும் மாநகராட்சி தோறும் மினி லாக்டவுன் போன்று பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

Views: - 316

0

0