கோவையில் அண்ணாமலை போட்டி… நீலகிரியில் களமிறங்கும் எல்.முருகன்… வெளியானது பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்!!

Author: Babu Lakshmanan
21 March 2024, 6:29 pm
annamalai-updatenews360
Quick Share

நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவுக்குப் போட்டியாக பாஜக தனி கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, ஓபிஎஸ் அணி, ஐஜேகே, ஜான்பாண்டியனின் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. திமுக, அதிமுக கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்ட நிலையில், பாஜக தற்போது தான் கூட்டணி கட்சிகளுடான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது.

பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 இடங்களும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகளும், அமமுகவுக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல, பாரிவேந்தரின் ஐஜேகே, ஜான் பாண்டியனின் த.ம.மு.க., தேவநாதனின் இ.ம.க.மு.க., ஏ.சி சண்முகத்தின் புதிய நீதி கட்சிக்கு தலா ஒரு இடங்களும் ஒதுக்கப்பட்டு விட்டன.

இதன்மூலம் 19 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்குப் போக, எஞ்சிய 20 இடங்களில் பாஜக நேரடியாக போட்டியிட இருக்கிறது. இந்த நிலையில், பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டி என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், தென்சென்னையில் தமிழிசை சவுந்தரராஜனும், மத்திய சென்னையில் வினோஜ் பி செல்வமும் போட்டி என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் சென்னை – தமிழிசை சவுந்தரராஜன்
மத்திய சென்னை – வினோஜ் பி செல்வம்
வேலூர் – ஏ.சி. சண்முகம்
கிருஷ்ணகிரி – சி.நரசிம்மன்
நீலகிரி (தனி) – எல்.முருகன்
கோவை – அண்ணாமலை
பெரம்பலூர் – பாரிவேந்தர்
தூத்துக்குடி – நயினார் நாகேந்திரன்
கன்னியாகுமரி – பொன். ராதாகிருஷ்ணன்

Views: - 95

0

0