9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல்: 2ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறு…!!

Author: Aarthi Sivakumar
9 October 2021, 8:37 am
Quick Share

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதி நடந்து முடிந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல்: இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் | TN  Rural Local Body Election: Second Phase begins - hindutamil.in

இந்தத் தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 62 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 626 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 1,324 ஊராட்சித் தலைவர்கள், 10,329 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் இதர 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 உள்ளாட்சி பதவிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

8 மாவட்டங்களில் காலியாக உள்ள 130 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

34,65,724 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். வாக்குப்பதிவு பாதுகாப்புப் பணியில் 17,130 போலீஸார், 3,405 ஊர்க்காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணி வரை நடக்கிறது. மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டும் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Views: - 568

0

0