மீண்டும் விறுவிறு கொரோனா… முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை : மம்தா புறக்கணிப்பு

8 April 2021, 11:44 am
Modi - mamata - updatenews360
Quick Share

இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் கொரோனா தொற்று பரவலை மத்திய, மாநில அரசுகள் சிறப்பாக கட்டுக்குள் கொண்டு வந்தன.

இதனிடையே, கொரோனாவின் 2வது அலை மீண்டும் வீசத் தொடங்கியுள்ளது. உலக நாடுகளில் ஒருநாள் சராசரி பாதிப்பில் தற்போது இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. நாளொன்று ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேருக்கு அதிகமாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால், தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தமிழக அரசின் சார்பில் கலந்து கொள்ள உள்ளார். அதேபோல, மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளதால், அம்மாநில தலைமைச் செயலாளர் கூட்டத்தில் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தின் முடிவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான கட்டுப்பாடுகளும், வழிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 3

0

0

Leave a Reply