தடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் : பிரதமர் மோடி வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
23 September 2021, 8:55 am
modi - us - updatenews360
Quick Share

சென்னை : சர்வதேச பயணங்களை எளிதாக்கும் விதமாக, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் தடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடக்கும் க்வாட் அமைப்பின் உச்சி மாநாடு நாளை நடைபெற இருக்கிறது. இதில், பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

அங்கு அமெரிக்க அதிபர் பைடன் தலைமையில் நடந்த உலகளாவிய கொரோனா தடுப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொளி மூலம் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது : இந்தியாவில் 20 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியின் இரு தவணைகளையும் செலுத்திக் கொண்டனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள், 95 நாடுகளுடனும், ஐநா அமைதிப் படையுடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளன.

தடுப்பூசி உற்பத்தி அதிகரிக்கும் போது, அதனை பிற நாடுகளுக்கும் வழங்கும் பணிகளை இந்தியா மீண்டும் தொடங்கும். கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளில் உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச பயணங்களை எளிதாக்கும் விதமாக, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் தடுப்பூசி சான்றிதழ்களை உலக நாடுகள் பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும், எனக் கேட்டுக் கொண்டார்.

Views: - 135

0

0