மக்களுக்கும் மத்திய அரசுக்கும் தடையாக இருப்பது மம்தா மட்டுமே : பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!!

17 April 2021, 4:57 pm
Modi_Mamata_UpdateNews360
Quick Share

மேற்கு வங்கம் ; மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு சென்றடைவதில் தடையாக இருப்பது மம்தா பானர்ஜி மட்டும்தான் என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் இன்று 5ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அடுத்த கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அஸன்சோலில் நடந்த பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, அவர் பேசியதாவது :- இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பிற்காக முத்தலாக் முறையை ஒழிக்கவும், விவசாயிகளின் நலனை காக்கவும் மத்திய அரசு சட்டங்களை கொண்டு வந்தது. அம்பான் புயலால் பாதிக்கப்பட்ட போதும் மத்திய அரசு உதவி செய்தது. ஆனால், மத்திய அரசின் எந்தத் திட்டங்களும் மக்களுக்கு சென்றடையாமல் இருக்கும் ஒரு சுவராகத்தான் மம்தா பானர்ஜி இருந்து வந்துள்ளார்.

மாநிலத்தின் முன்னேற்றத்தையும் அவர் தடுத்து வந்துள்ளார். புலம்பெயர்ந்தவர்களுக்கான உதவிகளையும் அவர் தடுத்தார். மத்திய அரசு நடத்தும் எந்த கூட்டத்திலும் மம்தா கலந்து கலந்து கொள்வதில்லை, எனவும் அவர் கூறினார்.

Views: - 73

0

0