எங்க ஊர்ல கரண்ட் ரொம்ப கட்டாகுதுங்கய்யா.. முதலமைச்சர் ஸ்டாலினிடம் முறையிட்ட நபரின் வைரல் வீடியோ!!

Author: Babu Lakshmanan
30 April 2022, 3:44 pm
Quick Share

மின்வெட்டு ஏற்பட்ட போது நடந்து வந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம், மின் தடை தொடர்பாக பொதுமக்கள் நேரடியாக புகார் அளித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்களிடையே மின்சாரத்தின் பயன்பாடும் அதிகரிக்கிறது. அதேவேளையில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. இதனால், மாணவர்கள் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

இந்த சூழலில், தமிழத்தில் நிலவும் மின்வெட்டு, பொதுமக்கள் மற்றும் மாணவர்களை கடுமையாக பாதித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால், மின்வெட்டு வருவது சகஜம்தான் என்றும், இதனை தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அதேவேளையில், நிலக்கரி தட்டுப்பாடு காரணமாகத்தான் மின்தடை ஏற்படுவதாகவும், அதற்கு மாற்று நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், முதலமைச்சர் ஸ்டாலின் கரண்ட் இல்லாத பகுதியில் பேட்டரி லைட் வெளிச்சத்தில் நடந்து வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

அவர் நடந்து வந்து கார் ஏற முற்பட்ட போது, அங்கிருந்த பொதுமக்களில் சிலர், “ஐயா, எங்க ஊர்ல அடிக்கடி இப்படித்தாங்க கரண்ட் பிடுங்கி விடுராங்க… பார்த்து நடவடிக்கை எடுங்க,” என்று கூறுகின்றனர்.

இதனைக் கேட்ட முதலமைச்சர் பாக்குறேன் என சொல்லிவிட்டு நகர்ந்து செல்கிறார்.

மின்வெட்டு திமுக ஆட்சியின் நீக்க முடியாத வடுவாக இருந்து வரும் நிலையில், இப்படி முதலமைச்சர் ஸ்டாலின் வரும் போது கூட பவர் கட் செய்கிறார்களே, என்று அப்பகுதி மக்கள் பேசிக் கொள்கின்றனர்.

Views: - 701

0

0