எங்க வீட்லயும் கரண்ட் கட்டாகுது.. திமுக ஆட்சிக்கு வந்தாலே அறிவிக்கப்படாத மின்வெட்டும் வருது… பிரேமலதா விஜயகாந்த்..!!

Author: Babu Lakshmanan
2 May 2022, 4:10 pm

கரூர் : திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தமிழகம் முழுவதும் ஏற்படுவதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் நேற்று மே 1 உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு டிஎன்பிஎல் ஆலையில் வேலை செய்துவரும் ரோல் மற்றும் நாட்ஆன் ரோல் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், உரிய ஊதியத்தைக் கொடுக்க வேண்டும் என்று தேமுதிக சார்பில் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து காலை செய்தியாளர்களை சந்தித்தார் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த். அப்போது அவர் பேசியதாவது :- கரூர் டிஎன்பிஎல் இன் அதிகமான ஊழல்கள் நடைபெற்று வருகிறது இதனை கண்காணிக்க ஐஏஎஸ் குழு ஒன்றை நியமிக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தால் மட்டும் அறிவிக்கப்படாத மின்வெட்டு தமிழகம் முழுவதும் ஏற்படுகிறது. சென்னையில் எங்கள் வீட்டில் கூட மின்வெட்டு ஏற்பட்டுகிறது.

மாணவர்களிடையே ஏற்படும் கலாச்சார சீர்கேட்டை முடிவுக்குக் கொண்டுவர, மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் மது போன்ற போதை வஸ்துகளை விற்பனை செய்வதை கடுமையாக தடுக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு பல மடங்கு உயர்ந்துள்ளதாகவும் மத்திய மாநில அரசுகள் உடனடியாக பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும்.

மேலும், திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் மின்சார மற்றும் போக்குவரத்துத் துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறையில் 30% தரமற்றதாக உள்ளதுஇ எனக் கூறினார்.

இலங்கையில் ஏற்படும் பொருளாதார சூழ்நிலையை பற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தேமுதிக என்றுமே இலங்கைத் தமிழர்கள் நலனில் மிகுந்த அக்கறை உண்டு என்றும், எனவே அவர்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் எனவும் கூறினார். இதனைத் தொடர்ந்து ஆளுநருக்கும் ஆட்சியாளர்களுக்கும் இடையே ஏற்படும் அதிகாரம் மோதல்களால் வாக்களித்த பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆளுநர் மற்றும் மாநில அரசின் அரசியலை கைவிட வேண்டும் என்று அவர் கூறினார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!