கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட தடை : பொதுமக்களுக்கு காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 December 2022, 10:22 pm
Sea - Updatenews360
Quick Share

கடற்கரை மணற்பகுதிகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை, சீனா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

குறிப்பாக சீனாவில் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா காரணமாக தினமும் லட்சக்கணக்கானோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதையடுத்து, இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு கட்டாய பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் சர்வதேச விமான நிலையங்களில் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 2023ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பை கருதி சென்னையில் டிசம்பர் 31ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதி இல்லை என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மெரினா, சாந்தோம், பெசண்ட் நகர், எலியட்ஸ், நீலாங்கரை, பாலவாக்கம், காசிமேடு, திருவொற்றியூர் ஆகிய அனைத்து கடற்கரை மணற்பகுதி, கடற்கரை ஓரங்களில் அனுமதி இல்லை.

பொதுமக்களின் பாதுகாப்பை கருதி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுள்ளது.

Views: - 293

0

0