உங்கள் தொகுதி எங்கள் பார்வை : பொன்னேரி (தனி)…

28 February 2021, 8:10 pm
Ponneri - Updatenews360
Quick Share

வியூகங்களில் வல்ல பத்திரிக்கையாளர்கள் தங்களது உத்தேச கருத்துக்களை வெளியிட்டு தேர்தல் களத்தை விறுவிறுப்பாக கொண்டுசெல்கின்றனர்.

ஆந்திர பிரதேசம் அருகிலும் சென்னை மாவட்ட எல்லையிலும் அமைந்துள்ள தனித்தொகுதி பொன்னேரி ஆகு‌ம் .

ஆரணி, பொன்னேரி, பிஞ்சூர் ஆகிய பேரூராட்சிகளை உள்ளடக்கிய இந்த தொகுதியில் அத்திப்பட்டி நகரம் உள்ளது. சீரமைக்கப்பட்ட இந்த தொகுதியில் சோழபுரம் ஒன்றியத்தில் 15 ஊராட்சிகளை இழந்து 24 ஊராட்சிகளோடு சிறிய தொகுதியாக காட்சி தருகிறது.
ஏறத்தாழ 2 லட்சம் வாக்காளர்கள் இங்கு தமது பிரதிநிதியை தேர்வுசெய்ய ஆர்வமாக உள்ளனர்.

இங்கு முன்பு இருமுறை வென்ற திமுக உறுப்பினர் சுந்தரத்தை தவிர மற்ற உறுப்பினர்கள் கட்சி ஜெயித்தாலும் தொடர்ந்து இங்கு களம் காண்பதில்லை.

இங்கு தேர்தலில் அஇஅதிமுக 7 முறையும் திமுக 4 முறையும் காங்கிரஸ 2 முறையும் கிசான் பிரஜா கட்சி, இந்திய
பொதுவுடமை கட்சி ஆகியவை தலா ஒருமுறையும் வென்றுள்ளன .

பாமக கணிசமான வாக்குவங்கி வைத்திருந்து கூட்டணி கட்சின் கவனத்தை ஈர்க்கிறது. தேசிய கட்சிகள் இன்னும் முகம்காட்ட தங்களை தயார்படுத்தவில்லை .அஇஅதிமுக வின் பலராமன் தொகுதியில் பரவலாக அறியப்பட்ட இப்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

தொடர்ந்து பத்து வருடம் ஆட்சியில் இருந்தது அஇஅதிமுகவின் பலவீனமாக கருதப்பட்டாலும் பொன்னேரி சூப்பர் சிட்டி ஆக்கும் திட்டத்தின் செயல்பாடு போன்ற வை பலமாக பார்க்கபடுகிறது.பொறுத்திருந்து பார்ப்போம்.

Views: - 1

0

0