பெட்ரோல் குண்டுவீச்சு குறித்த விரிவான விசாரணை தவிர்ப்பு… சாதாரண நாசகார செயலாக மாற்றம் ; ஆளுநர் மாளிகை பகிரங்க குற்றச்சாட்டு

Author: Babu Lakshmanan
26 October 2023, 3:42 pm

பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக ஆளுநர் மாளிகை அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், திடீரென பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினார். இதைக் கண்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அந்த நபரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அந்த நபர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர ஆளுநர் ஒப்புதல் தராததால் பெட்ரோல் குண்டு வீசியது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததுள்ளது. இதனிடையே, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் குறித்து என்ஐஏ விசாரணையை தொடங்கியுள்ளது. கைது செய்யப்பட்ட வினோத் சிறையில் இருக்கும் போது, பிஎஃப்ஐ வழக்கில் கைதானவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளாரா..? என்ற விபரங்களை திரட்டும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில், பெட்ரோல் குண்டுவீச்சு தொடர்பாக ஆளுநர் மாளிகை அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று ஆளுநர் மாளிகை குற்றம்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாக பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப் போகச் செய்துவிட்டது.

அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!