நிதியமைச்சர் குறித்து தரக்குறைவான கருத்து..! விமர்சனங்களுக்கு பயந்து ஓடி ஒழிந்த முன்னாள் நீதிபதி சந்துரு..?
30 August 2020, 2:34 pmமுன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி அண்ணாமலை பா.ஜ.க.வில் இணைந்ததை விமர்சிக்கும் விதமாக சவுக்கு சங்கர் எனும் நபர் முகநூலில் போட்ட ஒரு பதிவில், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதியான சந்துரு ஒரு சாதியினரையும், நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பற்றி பாலியல் ரீதியான கருத்தையும் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக உயர் கட்டளைக்கு எதிராக எழுச்சி பெரும் நபர்களை குறித்து தனது சவுக்குஆன்லைன் எனும் பக்கத்தில் பதிவிடும் ஒரு தி.மு.க அனுதாபியான சவுக்கு சங்கர், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பாஜகவில் சேருவது குறித்து தனது இணைய பக்கத்தில் எழுதிய கட்டுரையை தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.
நீதிபதிகள் அரசு மற்றும் அரசியல் சார்ந்த விஷயங்களில் பங்கெடுக்கக் கூடாது என வலியுறுத்தும் இடது சாரி சித்தத்தாந்தங்களுக்கு வெளிப்படையாக ஆதரவு கொடுப்பவர் தான் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துரு.
இந்நிலையில் சவுக்கு சங்கரின் பேஸ்புக் பதிவில், மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சந்துரு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை குறிவைத்து “ஊருகாய் அம்மையார்” போலவே, அண்ணாமலை கர்நாடகா வழியாக ராஜ்யசபா இருக்கைக்கு தேர்வாவார் எனக் கூறியிருந்தார்.
மத்திய நிதியமைச்சரை ஊறுகாய் அம்மையார் எனக் கூறி பிராமணர் மற்றும் பெண் அடையாளத்தைப் பற்றிய ஒரு பாலியல் குறிப்பைப் போலவே கருத்துத் தெரிவித்திருந்தார்.
தமிழ் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் நல்ல ஊறுகாய் தயாரிக்கிறார்கள் என்று கூறப்படுவதால் “ஊறுகாய் அம்மையார்” எனும் இந்த குறிப்பு அவர்களைப் குறிப்பிட பயன்படுத்தப்படுகிறது.
இது ஒரு சாதிவாத குறிப்பு மட்டுமல்ல, பாலியல் ரீதியாகவும் மிகவும் தவறான கருத்து ஆகும். இது பிராமண சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் ஊறுகாய் தயாரிப்பதற்கு மட்டுமே ஏற்றவர்கள் என்ற கருத்தையும் மறைமுகமாகக் குறிக்கிறது.
இதைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் பலர், ஒரு காலத்தில் நீதிமானாக புகழப்பட்ட நபர் இவ்வாறு கொச்சையாக அமைச்சரை அதுவும் ஒரு பெண்ணை விமர்சனம் செய்துள்ளது சரிதானா என கொந்தளித்துள்ளனர்.
இந்நிலையில், தன்னுடைய கருத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருவதை உணர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, தனது முகநூல் கணக்கை மற்றவர்கள் பார்க்கமுடியாதவாறு லாக் செய்துள்ளார். இதனால் நெட்டிசன்கள் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல் ஓடி ஒளிவதற்காக அவர் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இதற்கிடையே சமூக வர்ணனையாளரும் அரசியல் ஆய்வாளருமான பானு கோம்ஸ், முன்னாள் நீதிபதி சந்துருவை மறைமுகமாக குறிப்பிட்டு, “இது போன்ற நபர்கள் தங்கள் கருத்துக்கள் உண்மையில் பாராட்டுக்கள் என்பதை உணரவில்லை. சுவை மாறாமல் ஆண்டுதோறும் பாரம்பரிய ஊறுகாய் தயாரிப்பது சவாலானது. இது அறிவியல், கணக்கியல், துல்லியம், தூய்மை மற்றும் கூர்மை தேவைப்படும் ஒரு செயல்பாடு. எனவே ஒவ்வொரு முறையும் யாராவது அவரை ஊறுகாய் அம்மையார் (நிர்மலா சீதாராமன்) அவருக்கு சிறப்பு சேர்ப்பதாகும்.” எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியான சந்துரு இது போன்ற தரக்குறைவான வார்த்தைகள் மூலம் விமர்சித்தது, நிதியமைச்சர் ஆதரவாளர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பிலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இது தொடர்பாக முன்னாள் நீதிபதி சந்துரு மீது வழக்குகள் பாயும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0
0