ரம்மியால் தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் பிரச்சனை : ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஓபன் டாக்!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2023, 4:28 pm

தெலுங்கானா மற்றும் புதுச்சேரி துணை நிலைஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரியில் பட்ஜெட் தாக்கல் செய்து பல நல திட்டங்களை மக்களுக்கு கொடுத்துக் கொண்டுள்ளார்கள்.

மரியாதைக்குரிய முதலமைச்சர் அதை சார்ந்த சகோதரர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு சிலிண்டர் மானியம் கொடுக்கப்படுகிறது. இது ஒரு ஆரோக்கியமான அறிவிப்பு அது மட்டுமல்லாமல் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தமிழகம் அறிவித்து இன்னும் கொடுக்க ஆரம்பிப்பதற்கு முன்னால் புதுச்சேரியில் குடும்ப தலைவிகளுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

பிறகு பெண் குழந்தைகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் காப்பீடு ஒன்று கொண்டு வந்துள்ளார்கள். பல நலத்திட்டங்களை புதுச்சேரி நிறைவேற்றிக் கொண்டு வருகிறது.

பாரத பிரதமர் சொல்வது போல் பெஸ்ட் புதுச்சேரியாக கொண்டு வருவதற்கு எல்லாம் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

2வது முறையாக ஆன்லைன் ரம்மி தடை சட்டம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, அது சட்டரீதியாக தமிழக அரசுக்கும், ஆளுநர்க்கும் உள்ள பிரச்சனை. எனவே அதில் நான் கருத்து சொல்வதில் சரியாக இருக்காது.

கட்ச தீவில் வழிபாடு செய்யும் இடத்தில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, வழிபாட்டு தலங்களை பிரச்சனைக்குள் கொண்டு வரக்கூடாது என்பதுதான் எனது எண்ணம் இதில் நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது.

நான் ஒரு கருத்து சொல்லி அது வேறு மாதிரி சென்றால் நன்றாக இருக்காது. இது இருநாட்டு பிரச்சனை எம்மதமும் சம்மதம் என்ற சூழ்நிலை எல்லா இடத்திலும் இருக்க வேண்டும் என்பது நல்ல விஷயம் என தெரிவித்தார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!