விஸ்வரூபம் எடுக்கும் சனாதன சர்ச்சை.. உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு!

Author: Udayachandran RadhaKrishnan
10 May 2024, 4:35 pm
Udhaya
Quick Share

விஸ்வரூபம் எடுக்கும் சனாதன சர்ச்சை.. உதயநிதிக்கு எதிராக உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு!

திராவிட கழகம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் சனாதன ஒழிப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது. இதில், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது மேடையில் பேசிய அமைச்சர் உதயநிதி, “சிலவற்றை மட்டும்தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்து தான் ஆக வேண்டும். டெங்கு, மலேரியா இவற்றையெல்லாம் நாம் எதிர்க்ககூடாது, ஒழித்து கட்ட வேண்டும். அதைப்போல தான் இந்த சனாதனமும். அதை எதிர்க்க கூடாது; ஒழிக்க வேண்டும்,” என்று பேசினார்.

மேலும் படிக்க: பனாரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய அய்யாகண்ணு : 45 நிமிடமாக போராட்டம்!!

அவரது இந்தப் பேச்சு தமிழகத்தில் மட்டுமல்லாது, தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேசமயம், உதயநிதி ஸ்டாலின் மீது நாடு முழுவதும் உள்ள பல்வேறு காவல்நிலையங்கள் மற்றும் நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டன.

இந்த விவகாரம் திமுக மட்டுமல்லாது திமுகவுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுக்கும், இண்டியா கூட்டணிக்கு பெரும் சிக்கலையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது.

மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஓய்வுபெற்ற நீதிபதிகள் உட்பட 262 பார் கவுன்சில் உறுப்பினர்கள் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதி இருந்தனர். உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த கோரிக்கைகள் மீதான விசாரணை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னர் விசாரணை நடைபெற்று வருகிறது.

அதில், உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் பதியப்பட்ட புகார்கள் குறித்து அந்தந்த மாநில அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Views: - 134

0

0