சசிகலாவால் ஏற்பட்ட இதுவரை இல்லாத நெருக்கம்… இரட்டை இலைக்காக இணைந்த கைகள் : குஷியில் அதிமுக!!

3 February 2021, 1:04 pm
eps ops - updatenews360
Quick Share

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்ததில் அதிமுகவில் குளறுபடி ஏற்படும், எப்படியும் கட்சி இரண்டாகி விடும் என்று திமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இபிஎஸ் – ஓபிஎஸ் இணைந்து பேசி, மீண்டும் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தது அக்கட்சியின் தலைமை. இதனால், எதிர்கட்சிகளின் திட்டம் சுக்குநூறாகி விட்டது.

இருப்பினும், முதலமைச்சர் வேட்பாளராக தான்னை அறிவிக்காததால், இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே ஒற்றுமை இல்லை என்றும், இருவருக்கும் இடையிலான இடைவெளி இன்னும் இருக்கத்தான் செய்கிறது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. அதுமட்டுமில்லாமல், முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்காததால், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவர் பக்கம் சாய்ந்து விடுவார் என்றும் கூறப்பட்டு வந்தது.

Ops Speech- Updatenews360

இதற்கேற்றாற் போலவே, ஓபிஸின் இளைய மகன் ஜெயபிரதீப்பும், சசிகலாவின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு, அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதனால், அப்போ தவறியது, இப்போ எப்படியும் அரங்கேறி விடும் என திமுக கழுகு போல அதிமுகவின் செயல்களை நோட்டமிட்டு வருகிறது.

ஆனால், இந்த முறையும் ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அதாவது, சசிகலாவிடம் மீண்டும் கட்சியை கொடுத்து விடக் கூடாது என்பதில் இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் திடமாக இருக்கின்றார்களாம். இதற்காக, இருவரிடத்திலும் இதுவரை இல்லாத ஒற்றுமை தற்போது நிலவி வருவதாக அதிமுக வட்டார தகவல் வெளியாகியுள்ளன.

இதன் சான்றாகவே, ஜெயலலிதா நினைவிட திறப்பு நிகழ்ச்சியில் இருவரும் ஒற்றுமையாக கலந்து கொண்டு சிறப்பித்தது, மதுரையில் ஜெயலலிதா, எம்ஜிஆர் கோவிலை திறந்து வைத்தது என அனைத்து நிகழ்வுகளிலும் இரண்டு பேரும் ஒற்றுமையாகவே இருந்து வந்துள்ளனர். மேலும், ஓபிஎஸ், இபிஎஸ் என இரு தரப்பினரின் போஸ்டர்களிலும் பாரபட்சம் இடம்பெறுவதில்லை.

eps - ops - updatenews360

அதோடு, சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டுபவர்களை கட்சியில் இருந்து நீக்கி ஓரங்கட்டும் நடவடிக்கைகளையும் இருவர் உடனுக்குடன் எடுத்து வருகின்றனர்.

மேலும், சசிகலாவிற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தியவர் ஓபிஎஸ். சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கியவர் இபிஎஸ். இரண்டு பேருமே தற்போது சசிகலாவை ஏற்க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. எனவே, கட்சியையும், ஆட்சியையும் இருவரும் ஒருசேர கொண்டு செல்ல கைகோர்த்துள்ளனர். இதற்கு அமைச்சர்களும் ஆதரவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், டெல்லி பாஜகவும் அதிமுக கூட்டணி மற்றும் முதலமைச்சர் வேட்பாளரை ஏற்றுக் கொண்டு விட்டதால், இனி சசிகலாவை எதிர்ப்பதில் இருவரும் தீவிரமாக இருப்பதாக சென்னை அதிமுக வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Views: - 1

0

0