சசிகலாவின் ரூ.2,000 கோடி சொத்துக்கள் முடக்கம் : வருமான வரித்துறை அதிரடி..!

By: Babu
7 October 2020, 4:19 pm
sasikala-1 updatenews360
Quick Share

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று வரும் சசிகலாவின் ரூ. 2000 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை சேர்த்த வழக்கில் சசிகலா பெங்களூரூ சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் இன்னும் சில நாட்களில் விடுதலையாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் சிறுதாவூர் பங்களா, கொடநாடு பங்களா உள்ளிட்ட சசிகலாவின் ரூ. 2000 கோடி மதிப்பிலான சொத்துக்களை வருமான வரித்துறையினர் அதிரடியாக முடக்கியுள்ளனர். சொத்துக்கள் முடக்கப்பட்டதற்கான நோட்டீஸ்களை வருமான வரித்துறையினர் ஒட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2017ம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் வீடு என 200க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றதாகக் கூறப்பட்டது.

sasikala updatenews360

ஏற்கனவே, கடந்த 2019ம் ஆண்டு ரூ.1,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, கடந்த மாதம் போயஸ் கார்டன், தாம்பரம், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ரூ.300 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிமுக சட்டப்பேரவை தேர்தலை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது, சிறையில் இருந்து சசிகலா வெளியே வந்த பிறகு, அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்த திட்டமிட்டிருந்த தினகரனுக்கு, வருமான வரித்துறையின் நடவடிக்கை கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 48

0

0