செப்.,14ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பா..? தமிழக அரசு விளக்கம்..!

5 September 2020, 5:57 pm
tn secretariat- updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் வரும் செப்.,14ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தற்போதைய கொரோனா பரவலை வைத்துப் பார்க்கும் போது, இந்தியாவில் இந்த ஆண்டுக்கு பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே, தற்போது 4ஆம் கட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது.

அதாவது, வரும் 14ம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதனால், உண்மை நிலவரம் தெரியாமல் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. “வரும் செப்., 14ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என வெளியாகி வரும் தகவல் பொய்யானது. அதேபோல, திரையரங்குகளும் ஆக.,1ம் தேதி முதல் திறப்பு என்ற தகவலிலும் உண்மையில்லை. பள்ளி, கல்லூரிகள் திறப்பு குறித்து உரிய நேரத்தில் அரசு அறிவிப்பை வெளியிடும்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0