சீமான் எங்களோடு இணைந்து கொள்ளலாம்… உருவாகிறதா புதிய கூட்டணி? ஹெச் ராஜா வைத்த ட்விஸ்ட்!!!

Author: Udayachandran RadhaKrishnan
27 June 2023, 9:11 pm
H RAja - Updatenews360
Quick Share

சிவகங்கையில் நடந்த தனியார் அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், அரசு நலத்திட்டங்களை விளக்கும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை ஹெச் ராஜா தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் பல்வேறு விஷயங்கள் குறித்தும் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். நடிகர்கள் அரசியலுக்கு வருவது, சிதம்பரம் தீட்சிதர்கள் விவகாரம், சீமான் எனப் பல விவகாரங்கள் குறித்தும் பேசினார்.

அவர் அங்கே பேசுகையில், சிதம்பரம் தீட்சிதர்கள் மீது பொய்யாக வழக்கைப் பதிவு செய்துள்ளனர். அறநிலையத்துறை அங்குச் செல்லவே அதிகாரமில்லை. சட்ட திட்டங்கள் தெரிந்து நடக்க வேண்டும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இல்லாத கோயிலுக்குள் அதிகாரிகள் எப்படிச் செல்ல முடியும். இந்த சட்டங்கள் குறித்து அறியாதவர் அமைச்சராக இருப்பதே இதற்குக் காரணம் என்று அமைச்சர் சேகர்பாபுவை விமர்சித்துப் பேசினார்.

தொடர்ந்து காங்கிரஸ் பக்கம் திரும்பிய அவர், “இத்தனை ஆண்டுகளாகக் காங்கிரஸை கொள்ளையடித்தவர்களில் ஒருவர் ப. சிதம்பரம்.. அவர் பற்றி எல்லாம் பேசத் தேவையில்லை.

2014 ஆண்டில் மட்டும் மோடி ஆட்சியைப் பிடிக்க வில்லை என்றால் இந்தியா மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும். பாஜகவை பொறுத்தவரை இங்கே மோடி தான் பிரதமர் வேட்பாளர். ஆனால், பீகாரில் ஏதோ எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்தியதாகச் சொல்கிறார்கள். அங்கே பிரதமர் வேட்பாளர் யார் என்று அட்டாக் மோடிற்கு சென்றார்..

தொடர்ந்து பேசிய அவர், சினிமா பாப்புலாரிட்டி மட்டுமே அரசியலுக்கு உதவாது. அதைத் தாண்டி எம்ஜிஆர், ஜெயலலிதா போல மக்களுக்காக இறங்கி வேலை பார்த்திருக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா வென்றார்கள் என்பதற்காகவே சினிமா பாப்புலாரிட்டியை மட்டும் வைத்து அனைவரும் வெல்ல முடியாது.

இதற்குச் சிவாஜி, டிஆர், பாக்கியராஜ் என பல உதாரணங்கள் உள்ளன. இருந்தாலும் அவருக்கும் அரசியலுக்கு உரிமை இருக்கிறது.

சீமான் பேசும் பல விஷயங்களை நான் அவருக்கு முன்பே பேசியுள்ளேன். அவர் டிவி நிகழ்ச்சியை நடத்தினாரே.. அப்போதே அதில் நான் கலந்து கொண்டு இருக்கிறேன். இருவருக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. அவர் பாஜகவை வரவேற்கிறேன் என்றே குறிப்பிட்டுள்ளார்.

சீமான் தமிழ் தேசியத்தைக் கைவிட்டால் நெருங்கி வரலாம். தமிழ் தேசியம் என்பது பிரிவினைவாதம், இந்தியத் தேசியம் என்பதே ஒற்றுமை. இதை அவர் உணர வேண்டும். இதைத் தவிர்த்துப் பார்த்தால் இருவரும் நல்ல நண்பர்கள் தான். அவரும் திராவிடத்தை ஏற்கவில்லை.. நாங்களும் ஏற்கவில்லை.

நாம் தனியாக இருந்தாலும் எதையும் செய்ய முடியாது சீமான் பகுத்தறிவோடு சிந்தித்து தமிழ் தேசியத்தைக் கைவிட்டால் வரவேற்போம். அதன் பிறகு அடுத்த கட்ட விஷயங்கள் குறித்துப் பேசலாம் என்று அவர் தெரிவித்தார்.

Views: - 288

0

0