அதிகாரத்தை யாருக்கும் பட்டா போட்டு கொடுக்கல்ல… ஒரு நாள் கைக்கு வரும்.. அப்ப, பேனா சின்னத்தை உடைப்பேன் : திமுகவுக்கு சீமான் வார்னிங்!!

Author: Babu Lakshmanan
6 February 2023, 6:14 pm

கன்னியாகுமரி: எதிர்ப்புகளை மீறி பேனா சின்னம் அமைக்கப்பட்டால், ஒருநாள் அதிகாரம் கைக்கு வரும் போது, பேனா சின்னத்தை உடைப்பேன் என்று சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சகோதரி மகளின் திருமணம் நடைபெற்றது. இதில் சீமான் பங்கேற்றார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது:- மழையால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அது மிகவும் குறைவு. முறையாக கணக்கீடு செய்து உரிய தொகை வழங்க வேண்டும்.

அதிகாரம் உங்களிடம் இருக்கும் போது மக்களின் கருத்தையும் மீறி பேனா வைப்பீர்கள் என்றால் அதிகாரம் எங்களிடம் வந்தால் நிச்சயம் உடைப்போம். பேனா சிலை வைக்க நடவடிக்கை எடுத்தால் நான் போராட்டத்தை துவங்குவேன். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று தனி தண்ணீர் தொட்டி வைப்பது அவமானம் குடிநீரில் மலம் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடமாநிலத்தவர்கள் தமிழகம் வருவது ஒருவித போர் தொடுப்பு தான். 5 ஆண்டுகளில் ஒன்றரைக்கோடி வடமாநிலத்தவர்கள் வந்துள்ளனர். இதற்கு பாஜக பின்புலம் உள்ளது.
சூரியன் ஈரோட்டில் கடந்த முறையும் உதிக்கவில்லை. இந்த முறையும் உதிக்கவில்லை. அங்கு மொட்டை கை தான் போட்டிக்கு நிற்கிறது. எங்களை அமைச்சர் சேகர்பாபு அண்ணன் அடிக்கடி கிச்சுகிச்சு மூட்டி விளையாடுகிறார்.

அண்ணாமலைக்கு சீனாவில் இருந்து ஆபத்து வருகிறது என கூறுகிறார்கள் சீனாவை அவ்வளவு கேவலமாக நினைக்கக் கூடாது தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்றால் சாமானிய மக்களின் நிலை என்ன..? எனவும் கேள்வி எழுப்பினார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?