முத்தம் கேட்டவரின் உதட்டை கடித்து துப்பிய பெண் : ரத்த வெள்ளத்தில் மிதந்த இளைஞர்.. ஷாக் சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
6 February 2023, 7:27 pm

பலாத்காரத்தில் இருந்து தப்பிக்க பெண் ஒருவர் தந்திரமாக செயல்பட்டுள்ள சம்பவம் பாராட்டுகளை குவித்து வருகிறது.

உத்தரபிரதேசத்தில் உள்ள மீரட்டில் இளைஞர் ஒருவர் பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக முத்தமிட, அந்த பெண், இளைஞரின் உதடுகளை கடித்து துப்பியுள்ளார்.

கடித்து துப்பிய பெண் கூச்சலிட, சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் உடனே அந்த பெண்ணை காப்பாற்றி நடந்தவற்றை கேட்டறிந்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் துடித்த இளைஞரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளித்த பின்னர் கைது செய்யப்பட்டார்.

இது குறித்த விசாரித்த போலீசார், கடந்த 4-ம் தேதி, வயல் வேலைக்குச் சென்ற போது குற்றவாளி தொடர்ந்து பின் தொடர்ந்து வந்துள்ளார்.

ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் பெண்ணை வலுக்கட்டாயமாக தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். ஆடைகளை களைத்து அத்து மீற முயன்றார்.

அப்போது சுதாரித்துக்கொண்ட பெண் முதலில் முத்தம் கொடுப்பதாக கூறியுள்ளார். அதற்கு அந்த பெண்ணின் பேச்சில் மயங்கிய வாலிபர் முத்தம் கொடுக்க சம்மதம் தெரிவித்தார்.

அந்த இளம்பெண் முத்தம் கொடுக்க முயன்ற போது வாலிபரின் உதட்டை பதம் பார்த்து விட்டார். இதையடுத்து பெண்ணின் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் வந்து அவரை காப்பாற்றி விட்டனர். வாலிபர் வலியால் அலறி துடித்தார்.

உதட்டில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இளம்பெண்ணின் புகாரின் பேரில் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • Coolie Movie Latest Updates கூலி படத்தின் சூப்பர் அப்டேட்… ரஜினி பிறந்தநாளில் லோகேஷ் அறிவிப்பு!
  • Views: - 399

    0

    0