விஷவாயு தாக்கி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த 3 பேர் உயிரிழப்பு… தனியார் ஓட்டல் மேலாளர் உள்பட 2 பேர் கைது…

Author: Babu Lakshmanan
21 October 2022, 2:41 pm
Quick Share

காஞ்சிபுரம் ; ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் ஓட்டலின் கழிவு நீர் சுத்தம் செய்யும் பணியின் போது 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் அருகே அமைந்துள்ள தனியார் விடுதியில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக ரங்கநாதன், நவின்குமார், திருமலை ஆகிய 3 பேர் உள்ளே இறங்கி உள்ளார். அப்போது, விஷவாயு தாக்கியதில் மூவரும் உள்ளேயே மயங்கி விழுந்தனர்.

sewege clean - updatenews360

கழிவுநீர் தொட்டிக்கு வெளியே இவர்களின் உடைகள் மட்டும் இருப்பதை கண்டு சந்தேகமடைந்த அங்கிருந்தவர்கள், உள்ளே எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது, 3 பேர் மூச்சு பேச்சில்லாமல் உள்ளே கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

sewege clean - updatenews360

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போலீசார் உதவியுடன் கழிவுநீர் தோட்டியில் மயங்கிக் கிடந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், 3 பேரும் விஷவாயு தாக்கி உயிரிழந்த நிலையில், சடலமாகவே மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

sewege clean - updatenews360

இந்த நிலையில், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது 3 பேர் உயிரிழந்த தனியார் விடுதியின் உரிமையாளர் சத்தியமூர்த்தி, மேலாளர் சுரேஷ்குமார், ஒப்பந்ததாரர் ரஜினி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், விடுதியின் மேலாளர் மற்றும் ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

sewege clean - updatenews360
Views: - 286

0

0