டிஜிட்டல் விளம்பரப்பலகை வைத்து விபச்சாரம் ; இது சென்னையா.. இல்ல சோனாகாச்சியா..? ஆதாரத்துடன் சென்னை போலீசுக்கு பறந்த புகார்..!!

Author: Babu Lakshmanan
24 December 2022, 3:07 pm
Quick Share

சென்னையில் விளம்பரப் பலகை வைத்து விபச்சாரம் நடக்கும் அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீசுக்கு பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாலியல் தொழில் என்பது தடை செய்யப்பட்ட ஒன்றாகவே இருந்து வருகிறது. இருப்பினும், ஒருசில மசாஜ் சென்டர்கள், ஸ்பாக்கள் என பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக விபச்சார தொழில் நடத்தப்பட்டு வருகிறது. போலீசாரும் அடிக்கடி சோதனைகளை நடத்தியோ அல்லது ஏதேனும் புகாரின் அடிப்படையிலோ தடுத்து நிறுத்த முயற்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பரபரப்பான சென்னை மாநகரில் விளம்பரப் பலகை வைத்து விபச்சாரம் நடத்தி வருவதை நெட்டிசன் ஒருவர் சமூகவலைதளத்தின் மூலமாக அம்பலப்படுத்தியுள்ளார்.

சின்னமலையில் உள்ள ஒரு பகுதியில் இருக்கும் ஹோட்டலின் டிஜிட்டல் விளம்பரப் பலகையில், ரூ.1000 கொடுத்து ஏதேனும் ஒரு பெண்ணுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ளலாம் என்ற விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படத்துடன் இணைத்து கவிதா கஜேந்திரன் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ‘ சென்னையில் இது எப்படி நடக்கிறது, தயவு செய்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கூறி, போலீசாருக்கும், முதலமைச்சர் ஸ்டாலின், திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் அகில இந்திய பெண்கள் நல ஆணையத்திற்கும் அவர் டேக் செய்துள்ளார்.

சமூக வலைதளம் மூலமாக கொடுக்கப்பட்ட இந்தப் புகாருக்கு சென்னை போலீசாரும் பதில் அளித்துள்ளனர். கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக அவரது பதிவுக்கு போலீசார் பதிலளித்துள்ளனர்.

இதற்கு, கவிதா கஜேந்திரனும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். விரைவில் சென்னை போலீசார் இந்தப் புகார் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிகிறது.

Views: - 488

0

0