பட்டாசு ஆலைகளுக்கு பறிபோகும் உயிர்கள்… சிவகாசியில் மேலும் ஒரு ஆலையில் வெடிவிபத்து : 5 பேர் பலி

25 February 2021, 7:03 pm
Crackers fire accident - updatenews360
Quick Share

சிவகாசி : சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 5 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 12ம் தேதி சாத்தூர் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்தது. இதில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளத்தில் உள்ள மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.

அந்த ஆலையில் உள்ள 3 அறைகள் கடுமையாக சேதடைந்த நிலையில், 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் இருவர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Views: - 1

0

0