அண்ணா பல்கலை.,க்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை : தமிழக அரசு கடிதம்..!!!

3 November 2020, 9:30 am
anna-university-updatenews360
Quick Share

சென்னை : அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அப்பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய மனிதவளத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். மாநில அரசின் இசைவில்லாமல் எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் பல்வேறு கோரிக்கைகளும், தகவல்களையும் மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தார்.

துணைவேந்தர் சூரப்பாவின் இந்த நடவடிக்கைக்கு தமிழக அரசு மற்றும் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், பல்கலை.,யை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு செய்து கொடுக்கும் என்றும், உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை எனவும் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், துணைவேந்தர் சூரப்பா கூறியது போல அண்ணா பல்கலைக்கழகத்தால் தனியாக நிதி திரட்ட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 36

0

0

1 thought on “அண்ணா பல்கலை.,க்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை : தமிழக அரசு கடிதம்..!!!

Comments are closed.