ஜன.,29 முதல் 30 நாட்களுக்கு புதிய கோணத்தில் தேர்தல் பிரச்சாரம் : முக ஸ்டாலின் பேட்டி

25 January 2021, 11:37 am
Quick Share

சென்னை : சட்டப்பேரவை தேர்தலையொட்டி வரும் ஜன.,29ம் தேதி முதல் புதிய கோணத்தில் பிரச்சாரத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை கோபாலபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- பெரிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. பல்வேறு துறைகளில் தமிழகம் தோல்வியை சந்தித்துள்ளது. தேர்தலை கருத்தில் கொண்டே ரூ.2500 வழங்கப்பட்டது. வரும் 29ம் தேதி முதல் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்னும் பெயரில் புதிய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கவுள்ளேன். திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடங்கி 30 நாட்களுக்கு இந்தப் பயணம் தொடரும். இந்தப் பயணத்தின் போது மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதே எனது முதல் பணி.

திமுக ஆட்சிக்கு வந்தால் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்களின் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் அறிக்கை வேறு, 100 நாள் செயல்திட்ட வேறு, எனக் கூறினார்.

Views: - 6

0

0