முடிவில் இருந்து திடீர் மாற்றம்… அண்ணாமலை பின்வாங்கியது ஏன்? பாஜக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
14 October 2023, 7:16 pm
mama - Udpatenews360
Quick Share

முடிவில் இருந்து திடீர் மாற்றம்… அண்ணாமலை பின்வாங்கியது ஏன்? பாஜக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி தண்ணீருக்காக கண்துடைப்பு கடையடைப்பு நடத்துவது திமுகவின் கபட நாடகம். டெல்டா விவசாயிகளை வஞ்சிக்கும் ஏமாற்றும் வேலை.

பாஜகவின் சார்பிலே டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன்களை காப்பாற்றுவதற்காக, கும்பகோணத்தில் வரும் அக்டோபர் 16 ஆம் தேதி திங்கட்கிழமையன்று, ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

இந்த உண்ணா நோன்பு போராட்டத்தை முன்னாள் அமைச்சர் தலைவர் திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் தொடங்கி வைக்க, மாநிலப் பொதுச் செயலாளர் திரு.கருப்பு முருகானந்தம் அவர்களின் தலைமையிலே, கும்பகோணத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் திரு. கரு நாகராஜன் அவர்களும், மாநிலப் பொதுச் செயலாளர் திரு.பொன்பாலகணபதி அவர்களும், மாநில விவசாய அணி தலைவர் திரு ஜி.கே.நாகராஜ் அவர்களும், பாஜக தலைவர்களும், நிர்வாகிகளும் இன்னம் பெருந்திரளாக விவசாயப் பெருமக்களும், பொதுமக்களும் பங்கேற்கிறார்கள். தங்களின் கூட்டணிக் கட்சி என்ற ஒரே காரணத்துக்காக, காவிரி நதி நீரைத் திறந்து விடாமல் வஞ்சிக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டிக்காமல், அரசுமுறை நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அரசியல் லாபங்களுக்காக, நாடகமாடும் திமுக, தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைக்கிறது.

தொடரும் திமுகவின் துரோக வரலாற்றைத் தோலுரித்துக் காட்ட 16-10-2023 அன்று கும்பகோணத்தில் நடத்தப்படும். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை வெற்றி பெறச்செய்ய அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்குவார் என அண்ணாமலை அறிவித்த பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், அக்டோபர் 16ம் தேதி உண்ணாவிரத போராட்டம் என அண்ணாமலை அறிவித்து இருந்தார். தற்காலிகமாக இந்த போராட்டம் ரத்து செய்யப்படுகிறது. மீண்டும் எங்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை பாஜக நடத்தும் என்றார்.

Views: - 447

0

0