உங்களுக்கு இதே வேலையா போச்சா..? கடுப்பான நீதிபதிகள்… திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை லெஃப்ட் & ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்…!!

Author: Babu Lakshmanan
5 November 2022, 11:32 am
Quick Share

லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் காட்டமாக கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

திமுக அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் அனிதா ராதாகிருஷ்ணன். இவர், கடந்த 2002-2006ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்களிடமும் விசாரணை நடத்தியது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்த போது, ஆரம்பத்திலேயே கடுப்பான நீதிபதிகள் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த சொத்துகுவிப்பு வழக்கை ரத்து செய்யக்கோருவது என்பது ஒரு மாநிலத்தில் ஆட்சி மாறியவுடன் தொடங்கும் ஒரு வழக்கமான நடைமுறையாக உள்ளது. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் அந்த கட்சியினர் தங்கள் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்கின்றனர். இது அதிசயமான நடைமுறையாக உள்ளது.

இந்த நீதிமன்றம் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறது. ஆட்சி மாறிவிட்டால் அனைத்து நடைமுறையும் மாற வேண்டும் என்று இல்லை. ஆட்சிக்கும் இதுபோன்ற வழக்கு விசாரணைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். ஆட்சி மாறிவிட்ட காரணத்தால், வழக்கு விசாரணையையும் , நீதிமன்ற விசாரணையையும் மாற்ற முடியுமா..?

உங்கள் கட்சி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க நீங்கள் தயங்கலாம். ஆனால், ஆட்சி மாறிவிட்டதால், அரசு இயந்திரத்தின் இயக்கம் மாறிவிடாது என காட்டமாக கூறினர். இதையடுத்து, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் மனுவை திரும்ப பெற அனுமதி கோரப்பட்டது. மனுவை திரும்ப பெற அனுமதியளித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Views: - 326

0

0