வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

2 July 2021, 1:28 pm
Supreme_Court_UpdateNews360
Quick Share

டெல்லி : வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதிமுக ஆட்சியின் போது பாமகவின் கோரிக்கையை ஏற்று கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உருவாக்கி அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு சட்டம் இயற்றியது. இந்த உள்ஒதுக்கீடு வழங்க தடைக்கோரி சந்தீப்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் நடைபெற்ற நிலையில், வன்னியர் சமூகத்துக்கான 10.5% உள்ஒதுக்கீடுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும், இதே விவகாரம் தொடர்பாக மதுரையை சேர்ந்த அபிஷ்குமார் தாக்கல் செய்த மனுவுடன் இந்த வழக்குகளும் விசாரிக்கப்படும் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

Views: - 73

0

0