2024 தேர்தலில் பாஜக ஜெயிக்கும்… ஆனா, அண்ணாமலை ஜுரோ தான் : எஸ்.வி. சேகர் ஆவேச பேச்சு..!!
Author: Babu Lakshmanan11 ஆகஸ்ட் 2023, 12:40 மணி
சென்னை ; ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியதை எந்த அதிமுக தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நடிகர் எஸ்வி சேகர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- பாத யாத்திரைக்காக இந்தியாவிலே மிகப்பெரிய கேரவனை பயன்படுத்துபவர் அண்ணாமலை. தன்னை வளர்த்து கொள்வதற்காக கட்சியை பயன்படுத்தி கொள்வதை தொண்டர் யாராலும் சகித்து கொள்ள முடியாது. அறவோர் முன்னேற்ற கழகம் என பிராமணர்களுக்கு என தனி கட்சி தொடங்கி உள்ளோம். ஒரு வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். தமிழக பாஜக வளர வேண்டும் என்பதற்காக கருத்துகளை நான் முன் வைக்கிறேன்.
பாஜகவில் நான் ஒரு மிஸ்டு கால் உறுப்பினர். 10 ஆண்டுகளுக்கு மேல் மோடியின் நண்பராக இருக்கிறேன். ஊர் கூடி தான் தேர் இழுக்க வேண்டும். அனைவரையும் வேண்டாம் என்று சொன்னால் தனியாக தான் நிற்க வேண்டும். எப்போதும் ஊழலை பற்றி மட்டுமே பேசினால் பயனளிக்காது.
மோடி மீண்டும் பிரதமராக வருவார். ஆனால், அண்ணாமலை பாஜக தலைவராக இருந்தால், அதில் தமிழ்நாட்டின் பங்கு கொஞ்சம் கூட இருக்காது. அதிமுகவுடன் கூட்டணி உறுதி செய்யப்பட்ட நிலையில், அண்ணாமலையால் அதிமுக அடிமட்ட தொண்டரின் ஒரு ஓட்டு கூட பாஜகவிற்கு கிடைக்காது. ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியதை எந்த அதிமுக தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், என தெரிவித்துள்ளார்.
0
0