MGR, காமராஜருக்கு அடுத்து அண்ணாமலை தான்… முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தைரியம் இல்லை ; அர்ஜுன் சம்பத் பரபர பேச்சு..!!
Author: Babu Lakshmanan11 ஆகஸ்ட் 2023, 12:06 மணி
திருவள்ளூர் ; என் மண் என் மக்கள் பாத யாத்திரைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாகவும், திராவிட மாடலை மாற்றி தேசிய மாடல் தமிழகத்தில் உருவாகும் சூழல் உள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார் .
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள அருள்மிகு சாண்டி சுயம்பு முத்தாரம்மன் ஆலயத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் பாரத பிரதமர் மோடி மீண்டும் வெற்றி பெற மகா மேறு பூஜை நடத்தி வழிபாடு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த எருமை வெட்டி பாளையம் வர மூர்த்தீஸ்வரர், பழவேற்காடு சமேயேஸ்வரர் ஆதிநாராயண பெருமாள் கோவில்களை உரிய முறையில் புனரமைக்க வேண்டும்.
கஞ்சா உள்ளிட்ட போதை பழக்கங்களால் சட்ட விரோத செயல்கள் நடைபெறுகிறது. அதனை தடுக்க வேண்டும். தமிழகத்திலிருந்து ஆந்திராவிற்கு அதிக அளவில் கால்நடைகள் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதை தடுக்க முன்வர வேண்டும். காவலர்கள் தனிப்பட்ட சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை கூறினால் பணி நீக்கம் செய்யப்படுவது இடம் மாற்றப்படுவது கண்டிக்கத்தக்கது.
என் மண் என் மக்கள் யாத்திரை மூலம் அரசியல் மாற்றத்திற்கு தமிழகம் தயாராகிக் கொண்டிருக்கிறது. திராவிட மாடல் மாறி தேசிய மாடல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அண்ணாமலையின் பாதயாத்திரைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. வேண்டுமென்றே சிலர் பாதயாத்திரை குறித்து அவதூறு பரப்பி வருகின்றனர். அண்ணாமலைக்கு எம்ஜிஆர், காமராஜர் போன்று மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பு உள்ளது.
புத்தக கண்காட்சி நூலகங்களை இந்து மத எதிர்ப்பு பிரச்சாரக் களமாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். நம்பிக்கை இல்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. மீண்டும் பிரதமர் மோடி மீதான நம்பிக்கையை காட்டுகிறது. காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு காங்கிரஸ் ஆதரிக்காவிட்டால் கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என கூற திராவிட மாடல் முதல்வருக்கு தைரியம் இல்லை.
குடும்ப அரசியல் வாரிசு அரசியலை அவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள், என அவர் தெரிவித்தார்.
0
0