கிருஷ்ணகிரியில் கல்யாணம்…மெட்டாவர்ஸில் வரவேற்பு: அவதார் உருவில் மணமக்கள், உறவினர்கள்…அசத்திய தமிழக தம்பதி..!!(வீடியோ)

Author: Rajesh
8 February 2022, 11:36 am
Quick Share

தமிழகத்தை சேர்ந்த புதுமணத்தம்பதி தினேஷ் மற்றும் ஜனக நந்தினி தங்களது திருமண வைபவத்தை தமிழகத்தின் பாரம்பரியம் மற்றும் புதிய தொழில்நுட்பத்தையும் இணைத்து கல்யாணத்தை முடித்துள்ளனர். இந்த திருமணம் 6ம் தேதி நடைபெற்றுள்ளது.

Tamil-Nadu-couples-Metaverse-Wedding-Reception-and-watch-the-video-here-Technology--

கல்யாண முகூர்த்தத்தை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவலிங்கபுரம் கிராமத்திலும், வரவேற்பு விழாவை மெட்டாவெர்ஸ் தளத்திலும் அரங்கேற்றி அசத்தியுள்ளார். ஆசியாவின் முதல் மெட்டாவெர்ஸ் வரவேற்பு விழா என இது அறியப்படுகிறது. இந்த மெட்டாவெர்ஸ் வரவேற்பு நிகழ்வை TardiVerse என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் சுமார் ஒரு மாத கால உழைப்பில் டிசைன் செய்துள்ளது.

image

இந்த வரவேற்பு நிகழ்வில் விருந்தினர்களின் அவதார், மணமக்களின் அவதார் மற்றும் மணமகள் ஜனக நந்தினியின் காலம் சென்ற தந்தையின் அவதார் முதலியவை டிசைன் செய்யப்பட்டுள்ளன. ‘கடந்த ஏப்ரலில் மறைந்த ஜனக நந்தினியின் அப்பா எங்களை மெட்டாவெர்ஸில் மட்டுமே வாழ்த்த முடியும்’ என தெரிவித்துள்ளார் மணமகன் தினேஷ்.

image

இந்த வரவேற்பு நிகழ்வில் இன்னிசை கச்சேரி கூட சென்னையிலிருந்து மெட்டாவெர்ஸ் தளத்தில் அரங்கேற்றப்பட்டுள்ளது. பிளாக்செயின், ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை ஒரே புள்ளியில் ஒருங்கிணைக்கும் ஒரு தளம்தான் மெட்டாவெர்ஸ். இந்த தளத்தில் பயனர்கள் தங்களது டிஜிட்டல் 3டி அவதாரங்களில் லைவாக சென்று மற்ற பயனர்களுடன் உரையாடலாம்.

ஆசியாவின் முதல் மெட்டாவர்ஸ் திருமணத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும், மணமகளின் இறந்த தந்தையும் இந்த திருமணத்தில் கலந்து கொண்டதுதான் ஹைலைட்.

Views: - 1032

0

0