தீபாவளி பண்டிகை: 2000 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டம்..!!

Author: Aarthi
14 October 2020, 5:55 pm
tn bus - updatenews360
Quick Share

தீபாவளி பண்டிகைக்கு 2000 சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை: அடுத்த மாதம் 14-ந் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் சனிக்கிழமை பண்டிகை வருவதால் வெள்ளிக்கிழமை அன்று பெரும்பாலானவர்கள் பயணத்தை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட விரும்புபவர்கள் பேருந்து, ரயில்களில் முன்பதிவு செய்வார்கள். ஆனால் தற்போது, கொரோனா தொற்று பரவல் காரணமாக பேருந்து, ரயில் போக்குவரத்து முழுமையாக நடைபெறவில்லை.

இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருமாதமே உள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. வழக்கமாக ஒரு மாதத்திற்கு முன்பே சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்படும்.

இந்த வருடம் கொரோனா தொற்று அச்சம் நிலவுதால் மக்கள் வெளியூர் பயணத்தை மேற்கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் சிறப்பு பஸ்களை குறைக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு சுமார் 2 ஆயிரம் சிறப்பு பஸ்களை இயக்கலாமா? அதற்கான சாத்திய கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

Views: - 40

0

0