தமிழகத்தில் ஜன.,20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு : தமிழக தேர்தல் ஆணையம்!!

10 September 2020, 6:16 pm
voters list - updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஜன.,20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபைக்கு இன்னும் 8 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்தாலும், அனைத்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களும், இடைத்தேர்தல்களும் தகுந்த முறையில் தேர்தல் நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியில் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது. எனவே, ஜனவரி 15ம்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

TN EC Sathya- updatenews360

இந்த நிலையில், ஜன.,15ம் தேதிக்கு பதிலாக ஜன., 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

மேலும், நவ.,16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் முதல் டிச.,15ம் தேதி வரையில் பெயர் சேர்ப்பு, நீக்குதல் போன்ற திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்றும், இதற்காக www.nvsp.in என்ற இணையதளமும், VOTER HELP LINE என்ற செல்லிடப்பேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Views: - 11

0

0