உங்க தாத்தா, அப்பன் வீட்டு சொத்தா…? செம-யா வாங்கிக் கட்டிக்கப் போகும் உதயநிதி ; ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதிலடி..!!
Author: Babu Lakshmanan13 டிசம்பர் 2023, 1:13 மணி
யார் அப்பன் வீட்டு சொத்தை கேட்குறார் உதயநிதி ஸ்டாலின் என்றும், அவரு தாத்தா, அப்பா, கொண்டு வந்த சொத்தா..?? என தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் காட்டமாக பதிலடி கொடுத்துள்ளார்.
கோவையில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்திரராஜன், நிகழ்ச்சி நிறைவடைந்து, விமானம் மூலம் ஐதராபாத் செல்ல கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:- தமிழகத்தில் மீண்டும் மழை வரும் போல் உள்ளது, சென்னை போன்று வெள்ள பாதிப்புகள் ஏற்படும் முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தமிழக அரசு மேற்க்கொள்ள வேண்டும்.
ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களை தாக்கியது கண்டனத்திற்கு உரியது. அறநிலையத்துறை அமைச்சர் ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தினோம் என்கிறார். கோவிலில், எந்த மாநில பக்தர்களாக இருந்தாலும் தரக்குறைவாக நடத்துவது, அடிப்பது வன்மையாக கண்டனத்திற்குரியது. வைகுண்ட ஏகாதசி விழா நடக்கும் போகும் இந்த சூழலில் இப்படி ஒரு சம்பவத்தால் கோவிலை மூடுவது வருத்தம் அளிப்பதாக இருக்கிறது.
இதனை தமிழக அரசு முறையாக விசாரணை நடத்தி கண்டிக்க வேண்டும். இதை விட அதிக பக்தர்கள் வரும் போது கோபத்தில் அடித்து விட்டேன் என்று சொல்லுவது தவறு, நீதிபதியிடம் இப்படி கூற முடியாமா???
காஷ்மீரை 370 சட்ட பிரகாரம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது வரவேற்கத்தக்கது. இனி ஜம்மு காஷ்மீர் நம்மோடு இணைத்தது, உரிமையாக திகழ்வது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. பெரியார் பற்றி பேசுவது நியாயமா..? அவர் இப்போது இருந்தால் வரவேற்பார். பெண்ணை பற்றி, பெண் உரிமை பேசும் முதல்வர் ஸ்டாலின் பழங்குடி பெண் ஜனாதிபதி ஆக ஒட்டு போட மறுத்தவர் தான்.
கேரளா கவர்னர் தாக்கப்பட்டு இருப்பது, பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது. வேறு பிரச்சனை ஏதாவது என்றால் குமரி முதல் காஷ்மீர் வரை போராட்டம் நடத்தும் நபர்கள், ஏன் கேரளா கவர்னர் தாக்கப்பட்டதை கேள்வி எழுப்பவில்லை, எனக் கூறினார்.
அவங்க அப்பன் வீட்டு சொத்தையா கேட்குறோம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியது பற்றிய கேள்விக்கு, யார் அப்பன் வீட்டு சொத்து அவங்க தாத்தா கருணாநிதி, அவங்க அப்பா ஸ்டாலின் வீட்டு சொத்தா இது. கலைஞர் உரிமை தொகை என்றால் அவங்க சொத்தா இது. முதலில் உதயநிதி நாகரிகமாக பேச வேண்டும். நீங்கள் எல்லாம் உழச்சு கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தா இது. முதலில் அவங்க தொண்டர்கள் கேட்கனும். இது என்ன உங்க அப்பன் வீட்டு சொத்தா, உங்க தாத்தா, அப்பா, இப்ப நீங்க பதவியில் இருப்பது, என்று கேள்வி கேட்க இவரே வழிவகை செய்ய போறார் போல, என்று கூறி விடை பெற்றார்.
1
0