விமானம், காரில் செல்வதை விட லிப்டில் போகும் போதுதான் அதிக பயம் வருகிறது ; அமைச்சரை கிண்டல் செய்த தமிழிசை சவுந்தரராஜன்!!

Author: Babu Lakshmanan
3 December 2022, 8:53 am

திருவள்ளூர் ; விமானம் மற்றும் காரில் செல்வதை கடந்து, தற்போது லிப்டில் செல்வதற்கெல்லம் பயப்பட வேண்டி உள்ளதாக தெலங்கானா துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கிண்டலடித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஜெயகோபால் கரடியா விவேகானந்தா வித்யாலயா பள்ளியில் CBSEயின் தென் மண்டலம் அளவிலான மாபெரும் சதுரங்க போட்டிகள் கடந்த 30ம் தேதி முதல் 4 நாட்கள் நடைபெற்றது. இந்த மாபெரும் சதுரங்க போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா,தெலுங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் உள்ளிட்ட மாநில 658 பள்ளிகளை சேர்ந்த 11,14,17,19 வயதிற்கு உட்பட்ட 5,125 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தங்கள் அதீத திறமைகளை வெளிப்படுத்தி விளையாடினர்.

இந்த போட்டியில் ஒரு குழுவிற்கு 4 நபர்களாக 5 முதல் 6 சுற்றுகள் வரை நடந்த போட்டிகளில், லீக் அடிப்படையில் 6 சுற்றுகளில் ஆண்கள் அணியும், 5 சுற்றுகளில் பெண்கள் அணியும் விளையாடினர். இதில் அதிக புள்ளிகளை பெற்ற முதல் 11 வயது பிரிவில் தெலுங்கானாவை சேர்ந்த சங்கமித்ரா பள்ளி அணியும், அம்பத்தூர், மதுரவாயில் சேர்ந்த வேலம்மாள் பள்ளியை சேர்ந்த அணிகள் உட்பட 14,17,19 வயதிற்குட்பட்டவர்களில் ஆண்கள், பெண்கள் பிரிவில் ஒவ்வொரு வயது பிரிவிலும் 3 அணிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அதில், முதலாம் மற்றும் இரண்டாம் இடத்தில் மொத்தம் 16 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். CBSE சதுரங்க போட்டி குழுவினரால் தேசிய விளையாட்டுகளில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்களுக்கு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் & தெலுங்கானா ஆளுநர் டாக்டர்
தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழுவினருக்கு மெரிட் சான்றிதழ், மெடல், வெற்றி பெற்ற பள்ளியின் அணிகளுக்கு வெற்றி கோப்பைகள் வழங்கினார்.

நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிகளை ஜெயகோபால் கரடியா விவேகானந்த வித்யாலயா பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர் மேடையில் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ;- செஸ் விளையாட்டு போன்றுதான் வாழ்கையும் முன்னேற சற்று பின்னோக்கி செல்ல வேண்டியது அவசியம். சீனாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஆனால், நாம் பாதுகாப்பாக இருக்கிறோம். தடுப்பூசி எடுத்து கொண்டதால்தான்.

விமானத்தில் சென்றால் பாதுகாப்பு இல்லை என தோன்றும். காரில் சென்றால் பாதுகாப்பு இல்லை என தோன்றும். ஆனால் இப்பொழுது லிப்டில் செல்வதுகூட பாதுகாப்பு இல்லை. என்னடா வாழ்க்கை இது என எண்ண தோன்றுவதாக, காதார துறை அமைச்சர் சுப்ரமணியன் லிப்டில் சிக்கிகொண்டதை கிண்டல் செய்து பேசினார்.

G 20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவது அனைவரும் பெருமை பட வேண்டிய காரியம், இதன்மூலம் விவேகானந்தர் கனவை பிரதமர் மோடி நனவாகி உள்ளர் என புகழாரம் சூடியுள்ளர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி கோவில் யானை லட்சுமி இறந்த விவகாரத்தில் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு பதில் கூறுகையில், “அனைத்திலும் அரசியல் செய்து வந்தவர். தற்போது யானையிலும் அரசியல் செய்கிறார் என்பதுதான் கவலையாக உள்ளது.

உங்களை,என்னை குறை கூறிவிட்டு தற்போது யானைக்கு வந்துவிட்டார். யானை இறந்தது அனைவர்க்கும் மன வருத்தம் தான். இனி வரும் காலத்தில் கோவில் யானைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என வழிமுறைகளை மேற்கொள்ளலாம் என தெரியவந்துள்ளது.

யானை லட்சுமிக்கு ஏற்கனவே உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது. இறந்தவுடன் உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்திலும் விமர்சனம் செய்வது மக்களை வேறு விதமாக சிந்திக்க வைக்க வேண்டும்,” என கருத்து கூறிஉள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!