பேருந்தில் மின்சாரம் பாய்ந்த விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் : உரிய விசாரணை நடத்தவும் உத்தரவு

13 January 2021, 3:48 pm
thanjai bus - updatenews360
Quick Share

தஞ்சாவூர் : தஞ்சை அருகே உயர் மின் அழுத்த கம்பியில் தனியார் பேருந்து உரசியதால், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பயணிகள் 5 பேருக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வரையில் கணநாதன் என்னும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக, செல்லும் வழித்தடத்தில் நேற்று சென்று கொண்டிருக்கும் போது, கண்டியூர் அருகே சாலையின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருந்த உயர் மின் அழுத்த கம்பியில் பேருந்தின் பாகம் உரசியுள்ளது.

இதனால், மின் அழுத்த கம்பியில் இருந்து பேருந்திற்கு மின்சாரம் பாய்ந்ததில், அதில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல்கருகி உயிரிழந்தனர். மேலும், சில பயணிகள் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பேருந்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த பயணிகளுக்கு தலா ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000மும், சாதாரண காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 25,000மும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, தஞ்சாவூரில் தனியார் பேருந்து மீது மின்கம்பி உரசியதில் 5 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

Views: - 8

0

0