உறவு முறை தங்கையை உயிருக்கு உயிராக காதலித்த அண்ணன்.. கொலையில் முடிந்த பரிதாபம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 September 2024, 12:40 pm

குன்னுவரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கபிலன் (24) சென்னை துறைமுகத்தில் லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மகளை கபிலன் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கபிலன் காதலித்து வந்த பெண் அண்ணன் தங்கை உறவு முறை என்பதால் இதனை மணிகண்டன் கண்டித்துள்ளார்.

இருப்பினும் கபிலன் தன் காதலை கைவிட மறுத்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று தன் காதலியை பார்க்க அவரது வீட்டிற்குச் சென்ற கபிலனுக்கும் மணிகண்டனுக்கும் இடையே பயங்கர வாய்தகராறு ஏற்பட்டுள்ளது

இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து கபிலனை சரி மாறியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த கபிலன் விருவீடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார் ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கபிலன் பரிதாபமாக உயிரிழந்தார்

இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விருவீடு போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை (46)கைது செய்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!