ஈவிகேஎஸ் வீட்டுக்கே பட்டா இல்லை.. வேணும்னா அண்ணாச்சி கிட்ட கேட்டு பாருங்க : சட்டசபையில் அமைச்சரால் சலசலப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
12 April 2023, 5:46 pm
EVKS KKSSR - Updatenews360
Quick Share

தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

இதில் பேசிய வருவாயத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர், பட்டா இல்லாதவர்களுக்கு பட்டாக் கொடுக்கும் பணிகளை விரைந்து முடிக்க ஆணையிட்டுள்ளதாக கூறினார்,

மேலும் ஈரோட்டு உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டுக்கே பட்டா கிடையாது. இதை சொன்னால் யாராவது நம்புவீர்களா எனவும் பேசினார்.

ஆனால் அது தான் உண்மை என்றும், இங்கோவன் அண்ணாச்சியை கூட கேட்டுப்பாருங்க என கூறியதால் சட்டசபையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

எம்எல்ஏவாக பதவியேற்ற பின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ், இன்று சட்டசபைக்குள் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் அவரை பற்றி இப்படி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல் பெரியார் வீட்டுக்கு பட்டா இல்லை என்றும் இந்த தகவலை தாம் முதலமைச்சரிடம் கூறிய போது அவரே ஆச்சரியப்பட்டு போனார் என்றும் எப்படி இவ்வளவு பெரிய ஆட்கள் விட்டார்கள் என தன்னிடம் கேட்டதாகவும் கூறினார்.

Views: - 316

0

0