இரு அவைகளின் ஜனநாயக உணர்வை குறைப்பது போல உள்ளது : எம்பிக்கள் இடைநீக்கத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 November 2021, 7:27 pm
Cm stalin -Updatenews360
Quick Share

நாடாளுமன்றத்தில் 12 எம்.பிக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கடந்த நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் செய்தனர். மழைகாலக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் அத்துமீறி நடந்து கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரிக்கை வைத்து இருந்தது.

அதனடிப்படையில் இன்று தொடங்கிய நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று இரு அவைகளிலும் 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இன்று பிற்பகல் மாநிலங்களவை அவை மாநிலங்களவையில் 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அறிவிப்பை மாநிலங்களவை துணைத் தலைவர் அறிவித்தார்.

இந்நிலையில், 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே 12 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இத்தகைய செயல்கள் நாடாளுமன்றத்தின் ஜனநாயக உணர்வைக் குறைக்கின்றன. இந்த இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Views: - 173

0

0