2ஜி ஊழலை விட இதுல 7 மடங்கு ஊழல்… திமுக அமைச்சர்கள் ரெண்டு பேரு ஜெயிலுக்கு போகப்போறாங்க : ஹெச் ராஜா!!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2023, 7:11 pm
H Raja - Updatenews360
Quick Share

கடந்த 16,17 ம் தேதியில் பாஜக தேசிய செயற்குழு டெல்லியில் நடந்தது . தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் 2024 ஜூன் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது , 9 மாநில தேர்தல் நாடாளுமன்ற தேர்தலுக்காக நீட்டிப்பு செய்யப்பட்டது.

குஜராத் சரித்திரத்தில் பாஜக உட்பட எந்த கட்சியும் இதுவரை பெறாத பெரும்பான்மையை இந்த முறை பாஜக பெற்றது. குஜராத்தில் 53.3 சதவீதம் வாக்கு பெற்றுள்ளது , பல வேட்பாளர்கள் 1 லட்சத்துக்கு மேல் வாக்குகள் பெற்றனர்.

குஜராத்தில் பட்டியலின தொகுதி 40 ல் 34ல் பாஜக வெற்றி , 27 பழங்குடி தொகுதியில் 23ல் வெற்றி. எதிர்கட்சிகளின் பாஜக குறித்த பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை மக்கள் நம்பவில்லை.

இமாசலில் 500 க்கும் குறைவான வாக்குகளால் 10 க்கும் மேற்பட்ட தொகுதியில் வெற்றியை தவறவிட்டோம் , வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்தது.

ராகுலின் பாரத் ஜோடோ யாத்திரை , முடியும்போது வெறும் ‘சோடோ..’வாகத்தான் இருக்கும், பயணம் என்ற பெயரில் பாட்டி வீட்டுக்கு சென்று அவ்வப்போது ராகுல் காந்தி ஓய்வு எடுப்பார்.

கடந்த காலத்தில் குறைப் பிரசவ அரசாங்கங்கள்தான் இந்தியாவில் இருந்தது , மோடி மூலம் அரசியல் நிலைப்புத் தன்மை இந்தியாவிற்கு கிடைத்துள்ளதால் ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது.

கொரோனாவால் பொருளாதார , சுகாதார ரீதியாக பின்னடைவை சந்திக்காத ஒரே நாடு இந்தியாதான். கொரானா காலகட்டத்திலும் வளரும் நாடுகளுக்கான பொருளாதார பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ளது. 100 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்கியுள்ளோம்.

ஜி 20 நாடுகளை உலக பொருளாதாரத்தில் 85 சதவீத பங்களிப்பு , 75 சதவீத உலக வர்த்தகத்தில் பங்களிப்பு , உலக மக்கள் தொகையில் 60 சதவீதம் மக்கள் தொகை கொண்ட நாடுகள் ஜி 20 நாடுகள்.

தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல திராவிட மாடலை பின்பற்றுபவர்கள் காட்டிக் கொள்கின்றனர் ,

திருமணம் கடந்த உறவுக்கு சொந்தக்காரர்களான சிலர் இந்திய ஒற்றுமையை விரும்புவதில்லை , அவர்கள்தான் காசி தமிழ் சங்கத்தை எதிர்த்தனர்.

இலங்கையில் நடந்த முதல் தமிழ்ச் சங்க மாநாட்டால்தான் சிங்களர்களோடு சண்டை ஏற்பட்டது.

தமிழ்நாட்டில் அமலில் இருப்பது ஸ்டாலின் ஆட்சியா , மாலிக்கபூர் ஆட்சியா எனும் சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இந்துக்களின் சொத்துகளை பறித்து அவர்களை வீதியில் நிறுத்தும் வகையில் வக்ஃபு வாரியத்தின் நடவடிக்கைகள் இருக்கிறது.

திருச்சியில் தமிழ் மன்னர்கள் கட்டிய கோயில்கள் இடம்பெற்றுள்ள பல ஊர்களை வக்பு வாரிய சொத்து என்றார்கள் 3 மாதம் முன்பு.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வகாப்பு என்பவர் வசம் இருந்த சொத்துகளை வக்பு வாரிய சொத்துகள் என்று தற்போது மாவட்ட நிர்வாகம் மூலம் கூறியுள்ளனர்.

குறிப்பிட்ட அந்த 57.8 ஏக்கர் இடத்தில் இந்துக்கள் வசிக்கின்றனர். இப்போது அவர்கள் நடுத் தெருவில் நிற்கின்றனர். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் , காவல் கண்காணிப்பாளரை கைது செய்ய வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக இருவரும் நடந்து கொண்டுள்ளனர் . உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். தமிழ் நாடு முழுவதும் வக்பு சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் வலைதளம் மூலமாக எங்களிடம் புகாரை பதிவு செய்யலாம்.

இந்து விரோதமாக திமுகவின் ஆபாச ஆ.ராசாவும், விபசாரத்திற்கு புது வார்த்தை கண்டறிந்த ஒருவரும் நாங்கள் இந்து எதிரி அல்ல , நாங்கள் பார்ப்பனர்களுக்குத்தான் எதிரி என்கின்றனர்.

ஆனால் வக்பு வாரியத்தால் திருச்சியில் முத்தரையர் மற்றும் பட்டியலின மக்களும் , ராணிபேட்டையில் வன்னியர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர் , பிராமணர்கள் அல்ல.

எந்த கட்சியாலும் எங்களை தொட முடியாது , ஜி20 ஐ நாங்கள் அரசியலுக்காக பயன்படுத்த அவசியம் இல்லை.

ஈரோடு இடைத்தேர்தல் குறித்து நாளை கடலூரில் பாஜக செயற்குழு கூடி விவாதித்து முடிவு எடுக்கப்படும் , இடைத்தேர்தலுக்காக , தேர்தல் பணிக்கு பாஜக சார்பில் குழு அமைத்தது முதல் கட்ட தேர்தல் பணி , கூட்டணி கட்சி போட்டியிட்டாலும் இதுபோல குழு அமைப்போம்.

அண்ணாமலை இடைத்தேர்தலில் போட்டியிடுவாரா என்பது குறித்த கற்பனை , வதந்திகளுக்கு நான் பதில் சொல்ல அவசியம் இல்லை.

என் பெயரிலும் , என் மனைவி பெயரிலும் உள்ள மின் இணைப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வந்துள்ளது , மின்சாரத்துறை அமைச்சர் எந்த பணியும் செய்வதில்லை , மின் கணக்கீடு செய்யும் out sourcing பணியாளர்கள் செய்த தவறால் கூடுதலாக மின் கட்டணம் வந்துள்ளது , யாரோ செய்த தவறுக்கு நான் எப்படி கூடுதலாக பணம் கட்டம முடியும்..?

சிறைக்கு செல்ல உள்ள மூவரில் செந்தில்பாலாஜிக்கு அடுத்த இடத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் இருக்கின்றார். ஆவடி நாசர் 6 மாதம் மாடு மேய்த்து பால் கறந்து , ஒரு லிட்டர் பால் 36 ரூபாயில் லாபம் கிடைக்குமா என கூற வேண்டும்.

அதிமுக சின்னம் குறித்து நான் கருத்து கூற முடியாது. ஈபிஎஸ் ஓபிஎஸ் இருவரும் செல்வாக்கு கொண்ட தலைவர்கள்தான் . இடைத்தேர்தலில் திமுகவை தோற்கடிக்க பொன்னான வாயப்பு கிடைத்துள்ளது.

அலோலயா பாபுவை இந்து அறநிலையத்துறைக்கு அமைச்சராக வைத்திருக்கும் தீய அரசு இது . 250 சப்ஸ்கிரைபர் உள்ள யூடியூப் கார்ர்கள் கேள்வி கேட்கின்றீர்கள்.

காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டி உள்ளதால் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பது அவசியம் இல்லாத கேள்வி , திமுகவில் பெரிய கருப்பன் செய்தது குறித்து யாரும் கேள்வி கேட்க மாட்டீர்கள்.

நயினார் நாகேந்திரன் சேது சமுத்திர திட்டத்தை ஆதரிப்பதாக சட்டமன்றத்தில் கூறினாரா..? ராமர் பாலத்தை தகர்க்காமல் கட்டினால் ஆதரிப்பதாகத்தான் கூறினார்.

சுனாமியால் ராமேஸ்வரம் பகுதி பாதிக்கப்படாமல் இருக்க காரணம் ராமர் பாலம்தான் , அதை நீங்கள் மணல் திட்டு என்று சொன்னாலும் அதுதான் ராமேஸ்வரத்தை காப்பாற்றியது.

புதுக்கோட்டை வேங்கைவயல் பிரச்சனை குறித்து திருமாவளவனே மாநில அரசை குற்றம் சாட்டுகிறார். இது தொடர்பாக கருத்து கூற நான் விரும்பவில்லை.

Views: - 291

0

0