இதுதான் திமுகவின் நாட்டுப்பற்று.. குலசேகரப்பட்டினம் ராக்கெட்டில் சீன நாட்டுக் கொடி : கொந்தளித்த பிரதமர் மோடி!!!

Author: Udayachandran RadhaKrishnan
28 February 2024, 2:58 pm
Rocket
Quick Share

இதுதான் திமுகவின் நாட்டுப்பற்று.. குலசேகரப்பட்டினம் ராக்கெட்டில் சீன நாட்டுக் கொடி : கொந்தளித்த பிரதமர் மோடி!!!

தமிழ்நாட்டுக்கு வந்துள்ள பிரதமர் மோடி தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக இன்று அடிக்கல் நாட்டினார்.

சுமார் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிலையில் இதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்ட வந்திருக்கும் பிரதமர் மோடியை வரவேற்று விளம்பரம் கொடுத்துள்ளார்.

அந்த விளம்பரத்தில் பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படங்களை பெரியதா அச்சிட்டு, பின்னால் சீன நாட்டின் கொடி பொறிக்கப்பட்டுள்ள ராக்கெட் படம் அமைந்துள்ளது.

இஸ்ரோ தயாரிக்கும் ராக்கெட்டுகளை நம் தேசம் ஏவும் நிலையில், சீன ராக்கெட்டுகளின் புகைப்படத்தை வைத்து விளம்பரம் வெளியிட்டது கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

சர்ச்சை விளம்பரம் குறித்து நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். குலசேகரபட்டினம் ராக்கெட் ஏவுதள திறப்பு விழாவில் திமுக ஒரு விளம்பரம் கொடுத்துள்ளது. அதில் சீன நாட்டின் கொடியுடன் கூடிய ராக்கெட் படத்தை போட்டுள்ளார்கள். இதிலிருந்தே இவர்களின் நாட்டு பற்று நன்றாக தெரிகிறது என விமர்சித்தார்.

இதே போல தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அளித்த விளம்பரம், சீனா மீதான திமுக.,வின் அர்ப்பணிப்பையும், நமது நாட்டின் இறையாண்மையை அவர்கள் முற்றிலும் புறக்கணிப்பதையும் வெளிப்படுத்துகிறது.

ஊழலில் கொடிகட்டிப் பறக்கும் கட்சியான திமுக, குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவின் இரண்டாவது ஏவுதளம் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ஸ்டிக்கர்களை ஒட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறது. விரக்தியின் வெளிப்பாடு அவர்களின் கடந்தகால தவறுகளை புதைக்கும் முயற்சியை மட்டுமே நிரூபிக்கிறது. ஆனால் சதீஷ் தவான் விண்வெளி மையம் இன்று ஆந்திராவில் மட்டும் உள்ளது, ஏன் தமிழகத்தில் இல்லை என்பதை திமுக.,வுக்கு நாம் நினைவூட்ட வேண்டும்.

இஸ்ரோவின் முதல் ஏவுதளம் கருத்தாக்கம் செய்யப்பட்டபோது, இஸ்ரோவின் முதல் தேர்வாக இருந்தது தமிழகம்தான். இதற்கான கூட்டத்தில் அப்போதைய தமிழக முதல்வர் அண்ணாதுரை கடுமையான தோள்பட்டை வலி காரணமாக பங்கேற்க முடியாத நிலையில், தனது அமைச்சர்களில் ஒருவரான மதியழகனை கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார். அவருக்காக இஸ்ரோ அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்து, இறுதியில் மதியழகன் கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டார்.

அதுவும் மோசமான ரீதியில் கலந்துகொண்டார். இதுதான் 60 ஆண்டுகளுக்கு முன்பு நமது நாட்டின் விண்வெளித் திட்டத்துக்கு கிடைத்த வரவேற்பு. திமுக பெரிதாக மாறவில்லை, இன்னும் மோசமாகிவிட்டது என அதில் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 106

0

0