நாளை நடைபெறும் மேயர் தேர்தல்: போட்டியாளர் யார்? அதிகாரபூர்வ அறிவிப்பு…!!

Author: Sudha
4 August 2024, 1:00 pm

நெல்லை மாநகராட்சி மேயராக பதவியில் இருந்த பி எம் சரவணனுக்கும் கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.இதனால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் ஜூலை 8 ஆம் தேதி மாநகராட்சி ஆணையாளரிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் அந்த ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேயர் பதவி காலியானதால் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டு தேர்தல் ஆணையம் அறிவிக்கும் தேதியில் தேர்தல் நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் அறிவித்தார் இதனை அடுத்து புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் ஆகஸ்ட் 5 நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில் நாளை மறைமுகத்தேர்தல் நடைபெற உள்ளது நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே என் நேரு நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் என்று இது குறித்து ஆலோசனை நடத்தினர் இதில் மேயர் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்நிலையில் நெல்லை மாநகராட்சி மேயர் யார் என்று அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகியுள்ளது திமுக மேயர் வேட்பாளராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!