திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துகள் விற்க முடிவு…! குழுவும் அமைப்பு

23 May 2020, 10:07 pm
Tirupati - Updatenews360
Quick Share

திருப்பதி: பக்தர்கள் நன்கொடையாகவும், காணிக்கையாகவும் அளித்துள்ள சொத்துக்களை விற்க திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: பக்தர்கள் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் காணிக்கையாக, நன்கொடையாக சொத்துக்களை திருப்பதி கோவிலுக்கு அளித்து வருவது வழக்கமான ஒன்றாகும்.

இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான கோவில் நிர்வாக குழு பக்தர்கள் காணிக்கையாக அளித்து தமிழகத்தில் 23 இடங்களில் உள்ள சொத்துக்களை ஏலம் மூலம் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

சொத்துகள் விற்பனைக்கு என்று குழு ஒன்றையும் அமைத்து உள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply