மக்கள் ஒத்துழைப்பால் தான் இது சாத்தியம்…! கொரோனா பரவல் குறைவு குறித்து முதலமைச்சர் பெருமிதம்

6 August 2020, 1:45 pm
edappadi palanisamy erode - UpdateNews 360
Quick Share

திண்டுக்கல்: தமிழகத்தில் மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.

திண்டுக்கல்லில் ஆட்சியர் அலுவலகத்தில் அவர் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர், தொழில் முனைவோர், விவசாயிகள், சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோரை சந்தித்து உரையாற்றினார்.

அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. கொரோனா குறைப்புக்கான அனைத்து பணிகளையும் இந்த அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த தொற்றால் 210 நாடுகள் கடுமையான பொருளாதார இழப்பை எதிர்நோக்கி உள்ளன. இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாததால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் குணம் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவலும், இறப்பு விகிதம் குறையவும் மக்கள் அளித்த ஒத்துழைப்பே காரணம். ஒவ்வொரு உயிரும் அரசுக்கு முக்கியம். மக்களை காப்பதே எங்கள் கடமை.

வெளியில் செல்லும் போது முகக்கவசம் கண்டிப்பாக அணிந்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளி அவசியம். வெளியில் சென்று வந்தபின் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

வேளாண் பணிகளுக்கு எவ்வித தடையும் இல்லை. விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்று பேசினார்.

Views: - 53

0

0