தமிழகத்தில் இன்று 60 பேர் கொரோனாவுக்கு பலி…! 1200ஐ தாண்டிய உயிரிழப்பு

30 June 2020, 8:23 pm
Quick Share

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 60 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 50,074 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே, 38,889 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 60 பேர் உயிரிழக்க, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 1201ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 2,393 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 58,327 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தற்போதுவரை 11,70,683 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக, இன்று மட்டும் 30,242 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 

Leave a Reply