திருச்சியில் நேருவின் ஆதரவாளர்கள் களையெடுப்பு : உதயநிதியால் ஓரம்கட்டப்படும் மூத்த தலைவர்கள்!!

5 February 2021, 5:59 pm
DMK - udhaynidhi stalin - cover - updatenews360
Quick Share

சென்னை : திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதியால் திருச்சி திமுகவில் பெரும் கழகம் வெடித்துள்ளது. திமுக முதன்மை செயலாளர் கே.என். நேருவின் ஆதரவாளரும், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் நாவல்பட்டு விஜிக்கும், உதயநிதி ஆதரவாளரான மகேஷ் பொய்யாமொழிக்கும், இடையே ஏற்பட்டுள்ள மோதல், மூத்த தலைவர் நேருவுக்கும் உதயநிதிக்கும் இடையே நடக்கும் மறைமுக மோதலாகப் பார்க்கப்படுகிறது.

திமுகவில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியால் தொடங்கப்பட்ட வாரிசு அரசியலால், அவரது மகன் ஸ்டாலின் தலைவராகி உள்ளார். வாரிசு அரசியலால் தலைவரான ஸ்டாலின் தனது மகன் உதயநிதியை அடுத்த தலைவராக முன்னிறுத்தி வருகிறார். கட்சியின் பல ஆண்டுகளாக எத்தனையோ நிர்வாகிகள் பாடுபட்டு வந்தாலும், உதயநிதி அரசியலில் காலடி எடுத்தவுடன், அவருக்கு இளைஞர் அணித் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அவர் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருப்பதாகவும், அதனால் திமுக வலுப்பெறும் என்றும் கதைகள் காரணாமாக கூறப்பட்டது.

stalin-udhayanidhi-updatenews360

உதயநிதியின் இளைஞர் அணி தனியாக செயல்பட்டு வருகிறது. மற்ற தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் விதிக்கப்படும் எந்தக் கட்டுப்பாடும் உதயநிதிக்கு இல்லை. அண்மையில் திமுகவில் மறைந்த தலைவர்களைத் தவிர தலைவர் ஸ்டாலில் படம் மட்டும் போஸ்டர்களில் இடம் பெறலாம். வேறு தலைவர்களின் படங்கள் இடம் பெறக்கூடாது என்று ஸ்டாலின் அறிவித்தார். இது முதலில் உதயநிதிக்காகவே கூறப்பட்டுள்ளது என்று சொல்லப்பட்டாலும், உதயநிதியின் படங்கள் அனைத்து போஸ்டர்களிலும் காணப்படுகிறது. திமுகவின் அதிகாரபூர்வமான இதழான முரசொலியிலும், பக்கம் பக்கமாக வெளியிடப்படும் போஸ்டர்களிலும், உதயநிதியின் படம் ஸ்டாலின் படத்துக்கு அடுத்தபடியாக இடம்பெறுகிறது.

திமுகவின் எல்லாப் பதவிகளும் உதயநிதியைக் கேட்டுதான் முடிவு செய்யப்படுகிறது. அவர் கைகாட்டுபவர்களுக்கே பதவி என்ற நிலை இருப்பதால், உண்மையில் உழைப்பவர்களும், திறமை உள்ளவர்களும், கொள்கைப்பிடிப்பு இருப்பவர்களும் புறக்கணிக்கப்படுகிறார்கள். கட்சிக் கொள்கை பற்றிய அறிவோ, தெளிவோ இல்லாதவர்களும், கட்சியின் வரலாறு தெரியாதவர்களும், உயர் பதவிகளை பெறுகிறார்கள். உதயநிதியை விடவும் அறிவும், திறமையும் தகுதியும் குறைந்தவர்களே திமுகவில் பதவிக்கு வரும் சூழல் இருக்கிறது.

udhayanidhi stalin - updatenews360

இந்த நிலையில் புதிய பதவிகளில் இருப்பவர்கள் தனக்கு அடங்கி நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் உதயநிதி, மூத்த தலைவர்களை ஓரம்கட்டும் முயற்சிகளில் இறங்கியுள்ளார். தனது ஆதரவாளர்களை வைத்து மூத்த தலைவர்களையும், அவர்களது ஆதரவாளர்களையும் கட்சியில் உதயநிதி குறிவைக்கிறார் என்பதற்கு உதாரணமாக, திருச்சியில் நாவல்பட்டு விஜியின் நீக்கம் இருப்பதாக திமுக தொண்டர்கள் பேசி வருகிறார்கள்.

உதயநிதியின் வலதுகரமாக இருப்பவர் திருவெறும்பூர் தொகுதி உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி. மூத்த தலைவர் கே.என். நேருவின் ஆதரவாளராக இருப்பவர் விஜி. இவர்கள் இருவருக்கும் இடையே வெளிப்படையான மோதல் சமூக வலைத்தளங்களில் வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, விஜி கட்சிப் பொறுப்பில் இருந்து மட்டுமின்றி அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். இது நேருவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகவே கருதப்படுகிறது. மேலும், உதயநிதியின் ஆதரவாளர்களும் மோதினால், மூத்த தலைவர்களின் ஆதரவாளர்களுக்கும் இந்த நிலைதான் என்று பகிரங்க எச்சரிக்கியாகவே இது பார்க்கப்படுகிறது.

திமுகவில் உதயநிதியின் ஆதிக்கத்தால் எரிச்சல் அடைந்துள்ள மற்ற தலைவர்களுக்கு ஸ்டாலின் விடுக்கும் கடும் எச்சரிக்கையாக இது கருதப்படுவதால் மூத்த தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். திமுகவின் உதயநிதியின் பிடி இறுகி வருவதையும் மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்படுவதையும் இது எடுத்துக்காட்டுகிறது. ஏற்கனவே, திருச்சி மாவட்டத்தில் நேருவின் கட்டுப்பாட்டை நீக்கி தனது ஆதரவாளரான மகேஷ் பொய்யாமொழியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என்ற நோக்கத்தில்தான் நேரு முதன்மை செயலாளராக மாற்றப்பட்டு, திருச்சி மாவட்ட அரசியலில் இருந்து நீக்கப்பட்டார். இப்போது, திருச்சியில் அவரது ஆதரவாளர்களைக் களையெடுத்து முழுவதும் உதயநிதியின் ஆதிக்கத்தில் கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதையே நாவற்பட்டு விஜியின் நீக்கம் அம்பலப்படுத்துகிறது.

kn-nehru-anbil - updatenews360

தற்போதைய நிலையில் திமுக வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கையில் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளுக்குள் குமுறிவந்தாலும், வெளியில் அமைதியாக உள்ளார்கள். ஆனால், வரும் தேர்தலில் மூன்றாவது முறையாக தோல்வி அடைந்தால், உட்கட்சி மோதல்கள் வெளிப்படையாகத் தெரியவரும் என்று தொண்டர்கள் அச்சத்தில் இருக்கின்றனர். உதயநிதியால் கட்சியில் ஏற்படும் குழப்பத்தால் தோல்வி அடையும் வாய்ப்பு உருவாகும் என்ற கலக்கமும் கட்சியில் காணப்படுகிறது.

Views: - 0

0

0