அநாகரீகமற்ற கருத்தால் திமுகவை டேமேஜ் செய்த உதயநிதி..! வாரிசு அரசியல் என்ட்ரியால் தள்ளாடும் கழகம்..!

By: Babu
9 October 2020, 4:26 pm
udhayanidhi - updatenews360
Quick Share

தமிழகத்தில் மிகப்பெரும் அரசியல் தலைவர்களாக இருந்த ஜெயலலிதா, கருணாநிதிக்கு, மிகவும் பலம் வாய்ந்த, அதிகாரமிக்க அரசியல் எதிரிகள் இவர்கள் இருவரே. அரசியல் களத்தில் இருவரும் மாறிமாறி விமர்சித்துக் கொண்டாலும், தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யக் கூடாது என்பதில், அவர்களது அரசியல் அனுபவம் தடையாக இருந்தது. தற்போது, அதிமுக, திமுகவை ஆண்டு வரும் மூத்த தலைவர்களும், அந்த பாதையிலேயே பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அரசியல் கருத்துக்களையும், அரசியல்வாதிகளையும் விமர்சித்து பதிவிட்டு வரும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி டுவிட்டரில் அநாகரீகமாக கருத்து பதிவிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

stalin-udhayanidhi-updatenews360

வெள்ளை வேட்டி அணிந்த ஒருவர் தரையில் விழுந்து கிடப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு, டெட்பாடி போல் விழுந்து கிடக்கும் இந்த மானஸ்தன் யார் என்று தெரியுமா..? எனக் கேள்வி எழுப்பியதுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரையும் டேக் செய்துள்ளார். இவரது இந்தக் கருத்திற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

உதயநிதியின் கருத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நெட்டிசன் ஒருவர் விடுத்த பதிவில், “உதயநிதி அவர்களே. ஆயிரம் இருந்தாலும அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. துளியாவது அரசியல் நாகரிகம் பேணுங்கள். வசை நாடாமல் விமர்சிக்கப் பயிலுங்கள். உங்கள் தாத்தா அதைத்தான் செய்தார். உங்கள் தந்தையும் இழிவான சொற்களைப் பயன்படுத்துவதில்லை.

கலைஞர் இருந்திருந்தால் உங்களால் நிச்சயம் இதைச் செய்திருக்க முடியாது. எதிர் கூட்டணியிலிருந்த வைகோவை பிரச்சார மேடையில் இழிவுபடுத்தி பேசியதற்காக அந்த மேடையிலேயே தயாநிதி மாறனை மன்னிப்பு கேட்க வைத்தார் கலைஞர். உங்கள் கட்சி வரலாறையாவது முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிமுக தொண்டர்களும் உதயநிதி ஸ்டாலினை வறுத்தெடுத்து வருகின்றனர். எந்தவித அரசியல் அனுபவமும் இல்லாமல், வாரிசு வழியில் அரசியலுக்கு வந்தால், இது மாதிரியான தரம் தாழ்ந்த பேச்சுக்கள்தான் வரும் என பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மற்றொருவர், “நான்கு ஆண்டுகளாக அந்த மனிதரை சமாளிக்க முடியாமல் தான் உன் அப்பா இப்போது சைக்கிளிள் சுற்றி திரிகிறார் உன் அப்பாவிடம் கேள் அவர் யாரென்று கூறுவார்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, உதயநிதிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பல்வேறு டுவிட்டுக்களை அதிமுக தொண்டர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இவரது இந்தப் பதிவு உதயநிதியின் அரசியல் இயலாமையையும், கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி என்ன செய்தாலும் தலைமை தன்னை எதிவும் செய்யாது, காரணம் தலைவரின் மகன் என்ற அதிகாரம் மிதப்பில்தான், இதுபோன்ற கருத்துக்களை உதயநிதி கூறி வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Views: - 55

0

0