நவ.,9ல் நடக்கும் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக மேலும் வலுப்பெற வாய்ப்பு : 8 முதல் 9 இடங்கள் வரை கிடைக்கும் என எதிர்பார்ப்பு…!

Author: Babu
16 October 2020, 8:11 pm
Parliment 01 updatenews360
Quick Share

உத்தரப்பிரதேசத்தில் நவம்பர் 9-ல் நடைபெறும் மாநிலங்களைவைத் தேர்தலில் 8 முதல் 9 இடங்களை வெல்ல பாஜகவுக்கு வாய்ப்பு உள்ளதால், மாநிலங்களவையில் கூட்டணிக் கட்சிகளையும் உதிரிக்கட்சிகளையும் நம்பிருக்கும் நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்படும் சூழல் காணப்படுகிறது.

மக்களவையில் பாஜகவுக்கு கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமலே அறுதிப்பெரும்பான்மை இருக்கிறது. ஆனால், 245 உறுப்பினர்கள் இருக்கும் மாநிலங்களவையில் பாஜகவுக்கு 86 உறுப்பினர்களே இருக்கின்றனர். நியமன உறுப்பினர்கள் 12 பேர் சட்ட மசோதாக்களில் வாக்களிக்க முடியாது என்ற நிலையில் அகாலிதளம் போன்ற கூட்டணிக்கட்சிகள் ஆதரவுடனும் பிஜூ ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி போன்ற நடுநிலையான கட்சிகளின் ஆதரவுடனும் மாநிலங்களவையில் பாஜக சட்டங்களை இயற்றி வருகிறது.

ஆனால், வேளாண்மை தொடர்பான சட்டங்களில் கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அகாலிதளம் கட்சி அரசிலிருந்து வெளியேறி உள்ளது. மாநிலங்களவையிலும் மத்திய அரசை ஆதரிக்க மறுத்து விட்டது. பிஜூ ஜனதா தளத்துக்கும் 9 உறுப்பினர்களும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு 7 உறுப்பினர்களும் இருக்கின்றனர். இவர்களும் வேளாண்மை தொடர்பான மூன்று சட்டங்களுக்கும் ஆதரவு தர மறுத்துவிட்டனர்.

வேளாண்மை தொடர்பான சட்டங்கள் மாநிலங்களவையில் குரல் வாக்கு அடிப்படையில் இரண்டு நிறைவேறியுள்ளது. உறுப்பினர்கள் சட்டங்களின் மீது வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தற்போது பாஜகவுக்கு எதிராக பிஜூ ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட 117 உறுப்பினர்கள் அணி திரண்டுள்ளனர். சுயேச்சைகள் சிறிய கட்சிகள் சேர்த்து பாஜகவுக்கு ஆதரவாக 109 பேர் உள்ளனர். இதில், சிவசேனா கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்களும் வேளாண்மை தொடர்பான சட்டங்களுக்கு மட்டுமே ஆதரவு அளிக்க முன்வந்துள்ளனர். அதிமுகவுக்கு இருக்கும் 9 நாடாளுமன்ற உறுப்பினர்களே மாநிலங்களவையில் மத்திய அரசின் வெற்றிதோல்வியைத் தீர்மானிக்கிறார்கள்.

BJP_flag_UpdateNews360

இந்த நிலையில், நவம்பர் 9-ஆம் தேதி உத்தரப்பிரதேசத்தில் 10 மாநிலங்களவை இடங்களுக்கும் உத்தராகண்டில் ஒரு இடந்துக்கும் தேர்தல் நடைபெறுகிறது. உத்தரப்பிரதேசத்த்தில் பாஜகவுக்கு 8 உறுப்பினர்கள் கிடைப்பது உறுதியாகி உள்ளது. சமாஜ்வாதி ஜனதா கட்சிக்கு ஒரு இடம் கிடைக்கும். மீதியிருக்கும் ஒரு இடத்துக்கு முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜண் சமாஜ் கட்சிக்கும், காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதையும் சேர்த்து உததரப்பிரதேசத்தில் பாஜக 8 முதல் 9 இடங்களைக் கைப்பற்றும் சூழல் இருக்கிறது. மேலும், உத்தராகாண்ட் மாநிலத்தில் இருக்கும் ஒரே இடமும் பாஜகவுக்கேக் கிடைக்கும் என்பதால் மாநிலங்களைவையில் பாஜகவின் பலம் 86-ல் இருந்து 93-ஆக உயரும் என்று தெரிகிறது.

மொத்தமுள்ள 245 உறுப்பினர்களில் 12 நியமன உறுப்பினர்கள் வாக்களிக்க முடியாது. மீதமுள்ளவர்களில் 117 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால்தான் பாஜக இயற்றும் சட்டங்கள் மாநிலங்களவையில் நிறைவேறும். இன்னமும் கூட்டணிக்கட்சிகளின் ஆதரவு தேவையென்ற நிலையே இருந்தாலும். அப்படி தேவைப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை சற்றுக் குறைந்துள்ளது. மேலும், தற்போது நடைபெறும் பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும் எண்ணிக்கையில் தொகுதிகளை வென்றால் மாநிலங்களவையில் பாஜகவின் வலிமை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது

Views: - 51

0

0