எந்த நேரமும் என்னை படுகொலை செய்யலாம்.. உயிர் பிரியும் போது கூட இந்துத்துவாவை விட்டுத்தர மாட்டேன் ; வேலூர் இப்ராஹிம்!!

Author: Babu Lakshmanan
29 November 2022, 11:28 am

சேலம் ; இந்துத்துவா என்ற உயரிய சித்தாந்தத்தை விட்டு கொடுக்க மாட்டேன் என்று சேலம் பொதுக்கூட்டத்தில் வேலூர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

சேலம் மேற்கு மாவட்ட பாஜக சிறுபான்மை அணி சார்பில், சிறுபான்மை மக்களுக்கு நம் பாரத பிரதமர் ஆற்றிய திட்டங்கள் குறித்து, பாஜக தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது ; தமிழகத்தில் முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக நான் தான் அதிகமுறை கைது செய்யப்படுகிறேன். வேதனையாக இருக்கிறது. காவல்துறை அடக்குமுறை கேவலமானது. காஷ்மீரை தமிழகம் கேடுகெட்டு போய்விட்டது. ,ங்கு சட்டம் ஒழுங்கு கேடுகெட்டு போகிறது. ஒரு சதவீத இஸ்லாமியர்கள் செய்யும் மோசமான செயல்களினால் மொத்த இஸ்லாமியர்களுக்கு பாதிக்கப்படுகிறார்கள்.

எங்க கட்சியினர் என்னை பார்த்து சொல்வார்கள் நீங்கள் எம்பி ஆகிவிடலாம் என்றும், எம்எல்ஏ ஆகிவிடலாம் என்று சொல்வார்கள். ஆனால், நான் கத்தியின் மீது நடக்கிறேன் என்பது எனக் தெரியும்.

எப்போது வேண்டுமானாலும் நான் தமிழகத்தில் படுகொலை செய்யப்படுவேன், அப்படி படுகொலை செய்யப்படும் போது, திமுகவினர் அச்சுறுத்தலாலோ, காவல்துறையினரின் மிரட்டலாலோ, என் உயிர் பிரியும் போது கூட இந்துத்துவா என்கின்ற உயரிய சித்தாந்தத்தினை நான் கைவிட மாட்டேன், என்று கூறினார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?