மாறுவேடத்தில் இருக்கும் எதேச்சதிகாரிகளுக்கு காத்திருக்கிறது.. முதலமைச்சர் மீது அண்ணாமலை கடும் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2023, 7:25 pm
Stalin Vs Malai - Updatenews360
Quick Share

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டு தண்டனை நீதிமன்றம் வழங்கிய நிலையில் அவரின் எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்தன. குறிப்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ராகுல் காந்தி மேல்முறையீடு செய்வதற்கு முன்பே அவரது எம்பி பதவியை பறித்ததாக அறிவித்திருப்பது ஜனநாயகத்தின் மீது அடிக்கப்பட்ட சாவு மணி என்றும் பாஜகவின் இந்த பழிவாங்கும் அரசியல் எதேச்சதிகாரமாக உருமாறி ஆபத்தான வேகத்தில் செல்கிறது என அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தனது ட்விட்டர் பக்கத்தில், வரலாறு பேசும் திரு மு.க.ஸ்டாலின். கடந்த 2013ஆம் ஆண்டு செப் 28ஆம் தேதி தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ, எம்பிக்கள் தங்களது பதவியை மீட்க 3 மாத அவகாசம் கொடுக்கும் சட்ட திருத்தத்தை கிழித்து எறிந்தவர் ராகுல் காந்தி, அது முழுக்க முழுக்க முட்டாள்தனம்.

ஓபிசி உட்பட சில சமுதாய மக்களை அவமதித்தற்காகவும், அதற்கு மன்னிப்பு கேட்காததற்காகவும் நீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் ராகுல், மன்னிப்பு கேட்பதையே வழக்கமாக கொண்டவர் அவர்.

பொது இடங்களில் பொய் பரப்பிவிட்டு பின்னர் மன்னிப்பு கேட்டார். ஆகையாலயே இந்த தீர்ப்பு பொய் பேசுவதை பழக்கமாக கொண்டிருப்பவர்களை உலுக்கியிருக்கிறது.

ரபேல் விவகாரம் குறித்து பிரதமர் மோடி மீது குற்றஞ்சாட்டியதற்காக உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு 3 பக்கத்திற்கு எழுதி கொடுத்தவர் இந்த ராகுல் காந்தி.

உங்க அரசையே கவிழ்த்தவர்களோடு தான் கூட்டணியில் இருக்கிறீர்கள் என்பதை வரலாறு உங்களை நினைவூட்டியிருக்க வேண்டும். ஜனநாயகத்தை ஆதரிக்கும் மக்களாக மாறுவேடத்தில் இருக்கும் உங்களை போன்ற எதேச்சதிகாரிகளுக்கு என்ன காத்திருக்கிறது என்பதை நிச்சயமாக அறிவோம் என குறிப்பிட்டிருக்கிறார்.

Views: - 232

1

0